பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 வாழ்க்கைப் புயல் என்று ஆவேசம் ஆடுகிறீர்கள். முனிசிபல் நிலத்தை நான் தான் கிரயம் வாங்கினேன் என்று ஊரார் பேசிக்கொள்கிறார் களே, அது உண்மையா என்று கேட்டீர்கள். உண்மைதான் என்றேன். ஊரார் அப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள். ஊரார் எதைத்தான் பேசாமல் இருக்கிறார்கள். ஓட்டர்கள் காலிலே செங்கமமை பிள்ளை விழுந்து கும்பிட்டார் என்று கூடப் பேசிக்கொண்டார்கள். ஊரார் பேசிவிட்டால்,அது வேத வாக்கோ! நிலம் விற்கப்பட்டது; அதனைப் பார்த்து சாரதிச் செட்டியார் வாங்கினார்; அதற்கான ரிகார்டு இருக் கிறது; அதுபற்றி வம்பு பேசுபவர்கள், வாய் வலிசுகப் பேசட்டும், நகரசபை அதுபற்றிக் கவனிக்கத் தேவையில்லை. பார்த்தசாரதிச் செட்டியார் என் மருமகப் பிள்ளையாக இருப்பதாலேயே "விக்ரயம்' கெட்டுவிட முடியாது. 'மாதர் பூமி'க்குச் சுண்ணாம்பு சப்ளைக்கான கான்ட்ராக்டு எடுத்து இருப்பவர், கற்பூரப் பிள்ளை; அவர் உமது தம்பி" என்றார். சபையோர் சிரித்தனர்.கூடவே சேர்ந்து சிரித்தார், செங் காலம் பிள்ளையும். 'மாதுர் பூமி'யில் மொத்தம் நூற்று முப்பது விடுதிகள் கட்டத் திட்டமிட்டு, வேலை ஜரூராக நடைபெற்று வந்தது. என்னை அந்தக் கட்டிட வேலைக்கு மானேஜராக்கினார், வைடூ ரியம் செட்டியார். வேலையாட்கள் வருகிற நேரம், போகிற நேரம், செய்த வேலையின் அளவு, இவைகளைக் குறித்து வைப்பது, கூலி கொடுத்துக் கணக்கு எழுதுவது, வேலை ஒழுங்காகச் செய்யும்படி பார்த்துக்கொள்வது; இது என் வேலை. இதிலே கஷ்டம் இல்லையே, என்று கூறலாம். வெட்டு வது, குத்துவது, தூக்குவது, அரைப்பது, இவையல்லவா கடினமான வேலைகள்; உனக்கு என்னப்பா, வந்த ஆளைக்