பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளன் 55 மட்டும்; நான் அவர்களைக் கசக்கிப் பிழிந்து, வீடு போகும். போது கூலி தருகிறேன், ஒரு ரூபா ஆறணாவிலிருந்து ஒன்றே காலணாவரையில், பல ரகமாகப் பிரித்து, 'மாதூர்பூமி' வாயிலாக மாதம் 13,000 ரூபாய் வரும் என்று வைடூரியம் செட்டியார் குறித்திருந்தார். அந்த 13,000 ரூபாய் நிரந்தர வருமானத்தை அவருக்கு அமைத் துத் தரும் பாட்டாளி மக்களுக்கு அது தெரியும். ஆனால் அவர்கள் மனம் வேலையிலேயே ஈடுபட்டிருக்கிறது; எனவே,' "நாம் உழைத்து இவ்வளவு பாடுபட்டுக் கொள்ளை இலா பத்தை வேறு ஒருவர் அடைகிறாரே" என்று எண்ண நோம் இல்லை. நானோ சுண்ணாம்புச் சட்டி சுமக்கவில்லை; சுதந்தரம் சுகம், சமத்துவம், சமதர்மம் என்ற சுந்தரமான கருத்துக் களைச் சுமந்துகொண்டிருக்கிறேன். கல்லூர் வாழ்வு எனக்கு இந்தச் சுமைதாங்கி வேலையைக் கொடுத்துவிட்டது. அந்த எண்ணங்கள் உள்ளே குடைந்தன கண்ணெதிரே மாடு போல் உழைக்கும் மக்களைக் காண்கிறேன்; அவர்கள் சரி யாக உழைக்கிறார்களா என்று பார்த்துக்கொள்ளும் வேலை யையும் செய்கிறேன், அதற்காகப் பணமும் பெறுகிறேன், என் நிலை எப்படி இருக்கும் மனமோ மாத்துப் போத வில்லை, மார்க்சும் பிறரும் புகுத்திய கருத்துக்களையோ மறந்துவிடவில்லை; உழைப்பவன் கஷ்டப்படுகிறான், உழைப் பவனை உறுஞ்சுபவன் ஊராள்கிறான் என்பது தெரிகிறது விளக்கமாக, அதைத் தடுக்கும் சக்தியோ எனக்கு இயலை. நமக்கென்ன என்று இருந்துவிடவோ முடியவில்லை. தான் ஓர் பயங்கரமான இயந்திரத்தில் சிக்கிக்கொண்ட சிறுஎலி யானேன், யந்திரம் சுற்றிக்கொண்டே இருக்கிறது, அதன் ' கீழே சிக்கிப் பல பொருள் பொடி பொடியாகின்றன. எலியோ சக்கரத்தின் அடியிலே சிக்கவில்லை! உருளையின்