பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கிளைகளின் ஒன்றின்மேலே இருக்கிறது. வாழ்க்கைப் புயல் என்ன செய்யும் எலி? அந்த நிலை எனக்கு! வைடூரியம் செட்டியாரின் சுரண் டல் இயந்திரத்திலே சிக்கிச் சிதைகிறார்கள் அந்தத் தொழி லாளர்கள், சுரண்டுவது கொடுமை என்பதை உணர்ந்தவன் நான்; சுரண்டல் இயந்திரத்தின் காவலனாகவும் நியமிக்கப் பட்டிருக்கிறேன்! எப்படி என் நிலை! நான் வேதனையில் மூழ்கினேன். அவன் அறியாமல் ஒரு நாள் அந்த மூட்டையைத் தூக்கிப் பார்த்தேன். மூன்று நாளாயிற்று 'சுளுக்கு' தீந. அவனைத்தான் நான் ஒவ்வோர் நாளும், "தடியா! சீக்கிரம் மூட்டையைத் தூக்கு; ஆமைபோல நகராதே" என்று கண் டிக்கவேண்டும். சாதாரணமாகவே, எனக்கு அது வேதனை யாக இருந்தது, மூட்டையைத் தூக்கிப் பார்த்துவிட்ட பிறகு எனக்கு அவனைக் கண்டிப்பது என்றால் பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தொட்டாகவேண்டுமென்றால், எவ் வளவு கலக்கம் ஏற்படுமோ அப்படி இருக்கும்! என்ன செய் வேன், கான் மேனேஜர், செய்தாகவேண்டும். சுண்ணாம்புச் சட்டியைத் தலைமீது வைத்துக்கொண்டு ரணிமீது ஏறிப் பார்ந்தேன், ஐந்தாவது படிக்கட்டிலேயே விழுந்துவிட்டேன்; அதன்மீது ஏறிச் செல்லவேண்டிய பெண்ணைத்தான் அன்றாடம் "அன்ன நடை நடக்காதே ஆகட்டும் சீக்கிரம்" என்று சொல்லியாகவேண்டும். அதை நான் சொல்லும்போது, எனக்கு உண்டான வேதனையை எப்படிக் கூறமுடியும்! பாடுபடும் அவர்களின் பெரு மூச் சைக் கேட்டு, நான் பயந்தேன். அவர்கள் உடலிலே பொழி யும் வியர்வையைக் கண்டு கண்டு என் கண்களிலே நீர் வழியலாயிற்று வயிற்றுக்காகப் பாடுபடும் அந்த வறியவர் களின் வாட்டமும் வருத்ததும் எனக்கு என்றகத் தெரிந்