பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வாழ்க்கைப் புயல் என் இருக்கவோ முடியாது. அவர்களை நான் வேலை வாங்கியே ஆகவேண்டும்,அதுவே எனக்கு இடப்பட்ட வேலை. வேலையை ஒழுங்காகச் செய்கிறேனா என்று பார்க்க, செட்டி யார் மாலையிலே வந்து போவார். ஆகவே, நான், அந்தப் பரிதாபத்துக்குரிய மக்களை வேலை! வேலை! சீக்கிரம்! சீக்கி நம்! என்று அதட்டியபடி இருந்தாகவேண்டும், அவர்களை கான் அதட்டும்போதெல்லாம், என் மனதிலே ஒரு சம்மட்டி அடிப்பதுபோல் இருக்கும். "தம்பி! மாடல்ல, மனிதன்! கண் இல்லையா உனக்கு? கடும் வெயில் என்றுதானே நீ, மா நிழலிலே நிற்கிறாய் காலிலே செருப்புடன். அவனைமட்டும் சீக்கிரம் சிக்கிரம்' என்று மிரட்ட வேலை வாங்குகிறாயே நியாயமா?" என்று ல்ல கொடுமைதான், தெரிகிறது. ஆனால் நான் செய்வேன்; அவர்களை மேலை வாங்கியாகவேண் டுமே, அதுதானே என் வேலை" கேட்கிறதா அந்தப் பெருமூச்சு, சுமக்க முடியாத பானத்தைத் தூக்கினான் அவன், அதனால் அந்தப் பெரு அவன் வயிற்றுக்குப் போதுமான உணவுகூடக் கிடைக்காது இந்த உழைப்பால்" "உண்மைதான், நான் என்ன செய்வேன்?" கொஞ்ச நாளில், உன் கண்கள் பழகிவிடும், இந்தக் கோரக்காட்சிகளைக் கண்டு. உன் செவிக்கு அந்தப் பெரு மூச்சு சகஜமான சத்தமாகிவிடும். மனம் உணர்ச்சி யற்றுப் போய்விடும். நீ உண்டு, உன் வாழ்வு உண்டு என்ற அளவிலே எண்ணம் தடித்துவிடும். இப்போது ஏதோ மனிதனாக இருக்கிறாய், கொஞ்சநாளிலே, நீயும் ஓர் இயர். திறமாகிவிடுவாய்”