பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளன் நிலைமையை மாற்ற ஏன் அறிஞர்கள் முயலக்கூடாது என்று யோசித்தேன். பழங்கால அறிஞர்கள் பரலோகத்தைப் பற்றிய கருத்திலே மூழ்கிக் கிடந்தனர். பிறகு வந்தவர் களோ, கலை, ஜொலிப்பு, ஆகியவற்றுக்கே தமஜ் திறமை யைத் தத்தம் செய்தனர். பாட்டாளியின் குரலைக் கல னிக்க மறுத்தனர். முன்னவர்களின் செவியிலே, முரளி யின் சத்தமே புகுந்தது. பின்னவருக்கோ, சதங்கை, கிண் கிணிச் சத்தமே புகுந்தது; பாட்டாளியின் பெருமூச்சுக்கு இடமில்லை! வைடூரியம் செட்டியார்மீது கோபம் பிறந்தது. ஆனால் அந்தக் கோபம் அவர் என் எதிரே நின்று புன்னகை தவ ஐம் முகத்தோடு, கோபும் மட்டுமல்ல, எனக்கே சொல்ல வெட்சுமாகத்தான் இற்கும்போ எப்படியோ பறந்துவிடும். இருக்கிறது, கொள்கைகூட ஓடிவிடும். என் மனதுக்கு நேர்மாறான லாதம் புரிவார் அவர்; நான் என்னையுமறியா மல் தலை அசைப்பேன்.' "தம்பி! ஆட்களெல்லாம் ஒழுங்கா வேலை செய்கிறார் களா?" என்று கேட்பார் செட்டியார். ஒழுங்காகமட்டுமா உடல் உருகவேலை செய்கிறார்கள் என்பதைத்தானே வெட்ட வெளியிலே முளைத்து வரும் 'மாதுர் பூமி' காட்டுகிறது இருந்தாலும், கேட்பார் அந்தக் கேள்வியை. நான் அதற் கென்ன சந்தேகம்! அவர்கள் அரும்பாடுபடுவதால்தான் இந்த அழகான விடுதிகள் தோன்றுகின்றன. ஓயாது உழைக்கிறார்கள் என்றுதானே பதில் கூறவேண்டும்; சுண் ணாம்பும் கல்லும்மட்டுமல்ல, இந்தக் கட்டிடச் சாமான்கள், பாட்டாளியின் இரத்தமும் சதையும் கூடத்தான் ஐயா! என்று கூறவேண்டும். ஆனால் அவர் கேட்கும்போது, அந்த வாசகங்கள் வெளிவருவதில்லை. 'பரவாயில்லை' என்று