பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வாழ்க்கைப் புயல் சொல்வேன் நான். மனதறிந்த பொய்! ஆனால் கூசாமல் கூறினேன் அதனைப் பலதடவை. அவர்கள் உழைப்பதைக் கண்ணாங் பார்த்து மனக் கஷ்டமுற்றிருந்த நானே, 'பரவா யில்லை' என்றுதான் சொன்னேன், ஏன்? செட்டியார் கேட் கிற கேள்வியின் பாவனையே அந்தப் பதிலை, எப்படியோ என் ராவிலே கொண்டுவந்துவிடும். "இப்போகெல்லாம் ஆட்கள் சரியாக ளேலை செய்வதே கிடையாது" என்பார். இவருடைய தோட்டமும்,மாடி வீடும், ஆலையும், அதை அடுத்தமனைகளும், 'வேளை சரியாகச் செய்யாததாலா?ஏற் பட்டன? என்ன செய்வது, அவர் அப்படித்தான் கேட்பார், 'ஆமாம்' என்பேன். என். அப்படிச் சொன்னேன், எனக்கே புரியாது, அவருடைய கேள்வி அந்தப் பதிலைத்தான் கொண்டுவரும். சீறும் நாகம் சிறுகுழல் ஒலி கேட்டு, படம் எடுத்து ஆடுகிறதே, அதுபோல, அவர் கேட்பார் சில கேள்விகள், அவைகளுக்குப்பதில், என் கொள்கைக்கு சேர் மாளுன் உண்மைக்கு விரோதமாகவே எப்படியோ வரும். அவர் பாட்டாளிகளை உழைக்க வைத்தது மட்டுமல்ல, எப் படியோ என்னை, என் இஷ்டத்துக்கு மாறாகப் பொய்யும் பேசறைத்தார். இரண்டு யந்திரங்களுக்கு இடையே சிக்கிக்கொண் டிருக்கிறாய்" என்று என் மனம் சொன்னது முற்றிலும் உண்மை. அவர்கள் பாடுபடுபவர்கள் தங்கள் உழைப்பை அவருக்குத் தந்தனர். நானோ, என் உள்ளத்தையே அடகு வைத்துவிட்டேன் தெரிந்து செய்தேன் - தவிர்த்த முடி யாத விலையில் செய்தேன் - வழுக்கி விழுந்த வனிதையர், வாழ்வதற்காக விபசாரம் செய்வதாகக்கூறுகிறார்கள், அதற் காசு அவர்களை ஏசுகிறார்கள், சமூகத்திலே அவர்களைக் கறை என்றும் கூறுகின்றனர். உள்ள த்தையே விப