பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வாழ்க்கைப் புயல் என்று கூறினேன்.நான் புயலை எதிர்பார்த்தேன். ஆனால் ஏமாற்றமடைந்தேன். அவர் புன்சிரிப்புடன், "ஆமாம் பாவம்! இவ்வளவு படித்துவிட்டு, இந்தப் பயல்களைக் கட்டி . மேய்க்கிற வேலையைச் செய்வதென்றால் பிடிக்காதுதான். அடுத்த மாத முதல் பேங்கில் வேலைக்குப் போகலாம் என்று திட்டமாகக் கூறிவிட்டுப் போய்விட்டார். என் வேலை பிடிக்கவில்லை என்பதற்கு அவர் கண்டு பிடித்துக் கூறிய காரணம் என்னைத் தூக்கி வாரிப்போட் டது. ஆனால் எப்படி நான் உண்மையைக் கூற முடியும்! "ஐயா! தாங்கள் ஏழைத் தொழிலாளர்களைச் சுரண்டிக் செல்வவானாக வாழ்கிறீர்கள். அந்த முறை எனக்குப் பிடிக்க வில்லை. அதற்கு நான் உடந்தையாக இருக்க மனம் ஒப்ப 'வில்லை" என்று சொல்லவேண்டும். எப்படி நான் அதனைக் நின்றதிலிருந்து சொல்வது? கிடைக்காமல் அலைந்தபோது, ஆஸ்த்மா இருமலால் என் தகப்பனார் தவித்தபோது, ஒரு வார்த்தை சொன்னதும் எனக்கு வேலை கொடுத்தவர் செட்டியார்; மாதம் அறுபது ரூபாய் தருகிறார்; அன்பாக நடத்துகிறார். அவரிடம் நான், "சுண்டிப் பிழைக்கிறீர்கள் என்று சொல்வது நியாயமாகுமா? அவர் மனம்நோகாதா! எனவே, மனதிலே மூண்டெழுந்த கோபம், சோகமாக மாறிற்று; கோபமே பாதகமில்லை, சோகம், என்னைச் சித்திரவதை செய்தது. ஒருநாள், என் தகப்பனார், பக்கத்து வீட்டுக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்தப் பேச்சுப் புதியதோர் பயத்தை எனக்குத் தந்தது. சௌக்கியந்தானே, மகன், செட்டியாரிடம் வேலைக் குப் போகிறானல்லவா?”