பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



66 வாழ்க்கைப் புயல் மாதத்திலே கலியாணம் செய்துவிடலாம் என்று உத்தேசிக் கிறேன். "செய்துவிடவேண்டியதுதான். கலியாணச் செலவுக்கு மேலாகவே, 'மொய்'ப் பணமும் இனாமும் சேர்ந்துவிடும். பயப்படாதீர்." "கடவுள் இருக்கிறார்; அவர் விட்ட வழிப்படி நடக் கும், ஏதோ, பையன் சாது; கெட்ட பழக்கம், கெட்ட சாவகாசம் இல்லாததாலே, குடும்பம் கொஞ்சம் தலை எடுக்க வழி பிறக்கிறது.' "இராத்திரியிலே நெடுநேரம் விழித்துக்கொண்டிருக்கி றானே என்ன விஷயம்p" "அவனுக்குப் படிப்பதென்றால் ரொம்புப் பிரியம் இர வெல்லாம் படிக்கிறான். வேலை செய்கிற இடத்திலே, ஒரு ஆனைக்கூடக் கோபித்துக்கொள்ளமாட்டான். அவசாப் பட்டு ஒரு வார்த்தைகூடப் பேசுவதில்லை, மேல் வரும்படி கூட) அவள் வாய் திறந்து கேட்டதில்லை.” கேட்பானேன் மாமூல்தானே அது. வழக்கப்படி வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துவிடுவார்களே. அப்படித்தான்! ஆனால் மேல் வரும்படி வேண்டு மென்று அவன் யாரிடமும் ஜாடைமாடையாகக்கூடச் சொல்வதில்லை என்று அவன்கூடவேலை செய்பவர்களே ஆச் சரியப்படுகிறார்கள்.” யாராகோ ஆச்சரியப்பட்டது ஒருபுறம் இருக்கட்டும், இந்தப் பேச்சைக் கேட்டு நான் கொண்ட ஆச்சரியமும் அச்சமும் கொஞ்சமல்ல. மேல் வரும்படி அது என்ன வார்த்தை? இலஞ்சம்! ஆம்! பாட்டாளியின் உழைப்பை வைடூரியம் செட்டியார் அனுபவிக்கிறார்.இடையே இருக்கும்