பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கள்ளன் 6 எனக்கும் அதிலே பங்கு கிடைத்திருக்கிறது, எனக்குத் தெரியாமல்!! நான் வஞ்சகத்தால் வாழும் வைடூரியம் செட்டி யாரின் போக்கைக் கண்டிக்க எந்த விதத்திலே யோக் வதை உடையவன். எனக்குத் தெரியாமல் என் தகப்பனார் கட்டிட சம்பந்தமான சாமான்களைச் "சப்ளை' செய்யும் வியாபாரிகனிடம், "இலஞ்சம்" வாங்கி வருகிறார், என்ற உண்மை தெரிந்ததும் நான் நடுங்கிப்போனேன். "சப்ளை" செய்பவர்கள் என்னைக் கண்டு சிரிப்பதும், மரியாதை செய் வதும், அர்த்தமற்றது என்றுதான் எண்ணிக்கொண்டிருந் தேன், உண்மை நூலங்கிற்று. அப்பா பேசினதைக் கேட்ட பிறகு என்ன கொடுமை இது! எவ்வளவு கேவலம்! என் இலட்சியம், என்ன கதியாகிவிட்டது. நேற்று அப்பாவைப் பார்த்தேன்" இரும்பு வியாபாரி, மாக்கடைக்காபர், சுண்ணாம்பு விற்பவர், ஆகியோர்கள் சொல்லும்போதெல் லாம். நான் இந்த மேல் வரும்படி விவகாரம் நடக்கிறது அதனைத்தான் அவர்கள் ஜாடையாகக் கூறுகிறார்கள் என் பதைத் தெரிந்துகொள்ளாமற் போனேன்.நான் இலட்: சியவா தியாக இருந்தேன், அப்பா காரியவாதியாக இருக் தார்! எனக்குக் கலியாணமாம்! துவும்,மேல் வரும்படி பணத்தைக் கொண்டாம்! கடவுள் விட்ட வழி என்று இதற்குப் பெயராம்! வேதனை அடைந்திருந்த எனக்கு வெட்கமும் உண்டாயிற்று இந்த உண்மை தெரிந்ததும். வைடூரியம் செட்டியாரைக் கண்டிக்கும் நான், 'மேல் வரும் 'படி' பெற்றுக் கவியாணம் செய்துகொள்கிறேன் என்றால் சே! என்ன பிழைப்பு இது! பாடுபடுகிறான் பாட்டாணி, பசி யோடு போராடிக்கொண்டு, அவன் விஷயத்திலே பரிதா பப்பட்டு, அவனைச் சுரண்டும் காரியத்திலே உடந்தையாக