பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வாழ்க்கைப் புயல் இருக்கக்கடந்து என்று தீர்மானிக்கும் நான் சுரண்டல் இயந்திரத்திலே சிதறிய சிறு தூண்டுகளைப் பெற்று வாழ் வதா? ஈனப் பிழைப்பல்லவா அது? வேண்டாம் அந்தப் பணம்! வேண்டாம் அந்த வேலை!! என்று தீர்மானித்தேன். அன்றிரவு கள்ளச் சாவியிட்டு,அப்பா சேர்த்து வைத் திருந்த மூவாயிரத்தை எடுத்தேன். என்ன செய்வது? யாராரிடம் வாங்கினாரோ அவரவர்களிடம் கொடுத்துவிடு வது என்று நினைத்தேன். அப்பா, தூக்கத்திலே உளறிக் கொண்டிருந்தார், "பையன் சாது! கெட்ட பழக்கம் கிடை யாது. ஏதோ அவனாலேதான் குடும்பம் தலை தூக்கு கிறது! என்று பக்கத்து வீட்டுக்காரிடம் நீ சிக்கொண் டிருந்தாரே, அதே நினைப்பு. ஷன் கள்ளிரவில் கள்ளச் சாவியிட்டுப் பணத்தைக் களவாடுகிறேன்; அவர் தூக்கத் திலே, என்னைச் 'சாது' என்று அழைக்கிறார். என் தலை சுழன்றது! நான் என்ன செய்வேன்? என் இலட்சியம், அந்தப் பணத்தைப் பாதகச் சின்னம் என்று கூறிற்று தகப்பனாரின் குளறல், அவர் என்னிடம் வைத்திருந்த நம்பிக்கை, குடும்பம் தலை தூக்கவேண்டுமென்பதிலே அவ ருக்கு இருந்த பிரேமை, இவைகளைக் காட்டிற்று, என்ன செய்வது? நான் மகனாக இருக்கவேண்டுமானால், பணத்தை எடுக்கக்கூடாது இலட்சியவாதியாக இருக்கவேண்டு மானால் அந்தப் பணத்தை உபயோகப்படுத்தக்கூடாது. இரண்டிலொன்று அவர் கண் விழிப்பதற்குள், தீர்மாணித் தாகவேண்டும். ஒரு பக்கத்திலோ பாட்டாளிகளின் துயர மிக்க தோற்றம், அவர்களால் கொழுக்கும் முதலாளித்வம்; அதா வீசும் சிறு துண்டுகளைச் சேகரிக்கும் சிறு உருவர், மறுபக்கததிலே பர்த்தாலோ, கவலை தோய்ந்த என் தகப் பனாரின் முகத்திலே களிப்பு பிறக்கும் குறிகள் அவர்