பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கள்ளன் அண்டை அயலாரிடம் பெருமையாக என்னைப்பற்றிப் பேசு வன; இந்த இரண்டு காட்சிகளுக்கும் இடையே, இலட்சியங் களை மனதிலே கொண்டுள்ள நான். திகைப்புடன்! என் நிலையை என்னென்பேன். அப்பா திரும்பினார், நான் இருந்த பக்கமாக விளக்கை அணைத்தேன். இருமினார், பெட்டியை மூடிவிட்டு, மூலையில் பதுங்கினேன். "யார் அங்கே?” அப்பா கேட்கிறார்; அல்ல, பயத்துடன். ப்படாமல் தலை "விளக்கு நின்றுவிட்டதோ? காற்றா" அப்பா அறி யார் நான் விளக்கை நிறுத்தினேன் என்பதை. யணைக்கு அடியிலே தடவுகிறார். தீர்ந்தது, இரண்டோர் வினாடிகளில் தீப்பெட்டி கிடைத்துவிடும். பிறகு......என் கதி என்ன....."நீயா? என்? இது என்ன காரியம்" என்று அவர் கேட்பார். நான் என்ன சொல்வது? செய்வது? "கொமாரசாமி! டே! கொமாரசாமி '-அப்பா என்னைக் கூப்பிடுகிறார். தீப்பெட்டியில் குச்சி இல்லை. இருட்டு, பாபம்! விளக்கு இல்லை என்ற பயம் அவருக்கு. பணம் இருக்கிறதல்லவா. அதனால், உதவிக்கு என்னைக் கூப்பிடு கிறார்; நாங்கள் இரண்டுபேர்தானே வீட்டிலே! என்னைத் கவிர வேறு யாரைக் கூப்பிடுவார். ஆனால், நான் எப்படி 'இதோ அப்பா! என்று கூறமுடியும். “டோ. அப்பா! கொமாரசாமி!" கொஞ்சம் உரக்கக் ஈப்பிட்டுக்கொண்டே, அறையின் நாலா பக்கங்களிலும், கூர்ந்து பார்த்தார். பெட்டிக்கு அருகே நான். யாரங்கே!--அலறிக் கூச்சலிட்டார்!