பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வாழ்க்கைப் புயல் மேல் வேட்டியை வீசினேன் அவர் பக்கமாக, முகத் தருகே பாய்ந்தேன்; அவர் வாயை மூடினேன், வாயில் துணிவைத்து. அடைத்தேன்; கை கால்களைக் கட்டிவிட் டேன், அவர் வயதானவர்; போரிட்டதாக எண்ணிக்கொண் டார். என் பலத்துக்கு ஈடு சொல்லமுடியுமா அவரால்? ஐயயோ! திருடன் இரண்டு வார்த்தைகள்; குளறத்தான் முடிந்தது. அவரால், தகப்பனார் உருண்டு கிடக்கிறார் கைகால் கட்டப்பட்டு; கான் பக்கத்திலேதான் இருக்கிறேன், பண மூட்டையுடன்! மகன் கள்ளன் வேலையில்; தகப்பனார் பணத்தைப் பறி கொடுத்த நிலையில்! பணத்தைப் பார்த்தேன், நெளியும் அவரையும் பார்த்தேன், என்னையுமறியாமல் கண்களிலே நீர் புரண்டது, என்ன செய்வது? பணத்தை எடுத்துக் கொண்டு, அறையைவிட்டு கூடத்துக்கு வந்தேன். கால்கள் பின்னிக்கொண்டன, மண்டைக் குடைச்சல், மார்வவி! தட தடவென்று கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. மறுபடி யும் பதுங்கினேன். என் வீட்டிலேயே நான் பதுங்கினேன்! "உடை! பிள ஓட்டின் மீது ஏறு!!" வெளியே சத்தம் பலமாகிறது. கொமராசாமி! டோகொமாரசாமி! என்னைக் கூ பிடுகிறார்கள். "கிழவனைத் தனியாக விட்டுவிட்டு இவன் எங்கே கிளம்பிவிட்டான்?' பக்கத்து வீட்டுக்காரர் குரல். ஓட்டின்மீது ஏறுகிறார்கள். உள்ளே பதுங்கினேன்! விளக்குகள் வெளிச்சத்தைப் பரப்புகின்றன! சில நிமிஷங் களிலே பலர் உள்ளே நுழைவார்கள். நான் பண மூட்டை யுடன் பதுங்கிக்கொண்டிருக்கிறேன்; அவர் உள்ளே கட்டி உருட்டப்பட்டிருக்கிறார்.