பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கள்ளன் 71 தைரியமாகச் சென்று "ஏன்? என்ன? தூங்கிவிட் டேன், என் சத்தம்?" என்று கேட்கலாமே என்று தோன் றிற்று. கேட்கலாம். " என்ன தூக்கமடா இது, இவ்வளவு நேரமாகக் கதவைத் தட்டினோம்" என்பார்கள். 'குடியோ' என்று கேட்கக்கூடும். அத்துடன் நிறுத்தமாட்டார்களே. "எங்கே உன் அப்பா?" என்று கேட்பார்கள் "உள்ளே. தூங்குகிறார்" என்று கூறலாம். "என்னடா தூக்கம், ஏகாம் பர மொதிலி" என்று கூப்பிடுவார்கள். அவர் எப்படி எழுந்து வருவார் ! கண்டு பிடித்துவிட்டால் என்னை என்ன வென்று எண்ணுவார்கள். 'ஐயோ' என்று ஒரே அலறல், என்னையும் மீறிப் புறப் ட்டது அந்தக் குரல் "என்னடா தம்பி!" என்று கேட்டனர் பலர் உள்ளே தைரியமாகக் குதித்தவர்கள் அவர்கள் தெருக்கதவைத் திறந்துவிட்டனர். அதற்குமேல் என்ன நடந்ததோ எனக் குத் தெரியாது. கண்ணை மெள்ளத் திறந்தேன். மங்கலாகவே எங்கும் காணப்பட்டது, மனதிலே தெளிவு இல்லை. மூடினேன், திறந்தேன்; மூடினேன், திறந்தேன்! தலையை இப்பக்கமும் அப்பக்கமும் திருப்பினேன்! என் தகப்பனார், எனக்காகக் கஞ்சி ஆற்றிக்கொண்டிருக்கக் கண்டேன். அவரைப் பார்க்க தைரியமில்லை எனக்கு. மீண்டும் கண்களை மூடிக்கொண் டேன். "ஏகரம்பா மொதலி! எப்படி இருக்கிறான் பையன்?' பக்கத்து வீட்டுக்காரர் கேட்கிறார். "ஜாரம் குறையலே. இப்பத்தான் கண்ணைத் திறந் தாள், மறுபடியும் மூடிக்கொண்டான்" என்றார். எள் அப்பா.