பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வாழ்க்கைப் புயல் "இரண்டு நாள் ஆகுதே" என்றார் அவர். "ஆமாம் அது பொல்லாத பேயாமே, அது அடித்தா,ஆள் பிழைப் பதே கஷ்டமாம், என்னமோ நான் செய்த பூஜா பலன், பையன் உயிருக்கு ஆபத்து இல்லாமெ போச்சு" என் தகப் பனாரின் அன்பு கனிந்த பேச்சு. "என்ன ஆச்சரியமப்பா அது.நடு இரவிலே எழுந்து வந்து,உன் கைகாலைக் கட்டி, வாயிலே துணி அடைச்சி...' பக்கத்து வீட்டுக்காரர் அன்றிரவு நடந்ததைக் கவ னப்படுத்தினார். தானும் அதுதான் பேயின் சேஷ்டை; அதனாலேதான், அவன் என்னைக் கட்டிப் போட்டுவிட்டு, கூவென்று கூலி, ஊரையே ஒரு கலக்குக் கலக்கிவிட்டா என்றார் என் தகப்பனார். நல்ல காலந்தான் உனக்கு. பேய் சேஷ்டையிலே, உன்னைக் கொன்று விட்டிருந்தா என்ன செய்வது?" என்றார் பக்கத்து வீட்டுக்காரர், என் அப்பா சிரித்தார். நீங்க ளெல்லாம் ரொம்பப் பயந்துவிட்டீர்கள் இல்லை” என்று கேட்டார். "அடிவயித்தையே கலக்கிவிட்டது போ, முத சிலே உன் குரல் கேட்டது, ஐயயோ திருடன்னு'. வயித்து வலி எனக்கு அப்பத்தான் தோட்டத்துக்குப் போய் விட்டுக்காணைக் கழுவிக்கொண்டு வந்தேன். திருடன்னு கூவ்வே,நான் ஓடிப் போயி, எதிர்வீட்டுக்காரரை எழுப்பி னேன், ஏகாம்பரம்! ஏகாம்பரம்னு கூப்பிட்டோம், குரல் இல்லை. குமாரசாமியைக் கூப்பிட்டோம். பதில் இல்லை, உடனே எங்களுக்குப் பயமாயிடுத்து. விளக்கு எடுத்து கிட்டு வந்து, வீட்டுக் கதவைத் தட்டினா, திறக்கலே. ஒட்டுப்பக்கமா ஏறி உள்ளே வந்தா ஒரே இருட்டு.