பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

21


பாடங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பிறகு எடிசன் பல புத்தகங்களைப் படித்து அறிந்தார். விஞ்ஞான ஆராய்ச்சிக்குத் தேவையான படிப்பை படித்து நன்கு கவனம் வைத்துக் கொள்ளப்பழகிக்கொண்டார். எடிசன் பல ஆராய்ச்சிகள் நடத்தலானார். 1887 ம் வருடம் நவம்பர் மாதம் தம் ஆராய்ச்சியின் மூலம் கிராமபோனைக் கண்டுபிடித்தார்.

எடிசன் இளமையில் தான் அப்படியிருந்தார் என்பதில்லை. பெரியவரான பிறகும் கூட அவருக்கு கவனம் சரியாக இருப்பதே இல்லை. ஒரு சமயம் அவர் வரி கட்டுவதற்காக வரி செலுத்தும் அலுகவகத்துக்குச் சென்றிருந்தார். மக்கள் பணம் செலுத்த வரிசையாக நின்றிருந்தனர். எடிசனும் வரிசையில் நின்றார். வெகு நேரத்துக்குப்பின், அவர் பணம் கட்டவேண்டிய இடத்தை அடைந்தார் பணத்தை பெற்றுக்கொண்ட அதிகாரி, அவர் பெயரைக் கேட்டாராம். எடிசனுக்கு அப்போது தம்முடைய பெயரே மறந்து விட்டதாம். அவர் அப்படி தவிப்பதைக் கண்டு பக்கத்தில் இருந்த அவருடைய அடுத்த வீட்டுக்காரர் அவர் பெயரைச் சொன்னாராம் அதன் பிறகுதான் அவருக்குத் தம்முடைய பெயர் தாமஸ் எடிசன் என்பது நினைவுக்கு வந்ததாம்.

எடிசன் எப்பொழுதுமே தம்முடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பார். எதையாவது