பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6
உழைத்து உழைத்து பணத்தை குவித்தார்


யுத்த காலத்தில் எவ்வளவோ அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஏழையாக இருந்தவன் லட்சாதிபதியாகி இருக்கிறான். லட்சாதிபதி பிச்சைக்காரனாகி இருக்கிறான். இதெல்லாம் வியாபாரத்தில் ஈடுபட்டுத்தான். ஆனால் போர் மூண்டதின் காரணமாக, ஒருவர் பெரிய கப்பல் கட்டும் முதலாளியாகவும் நிபுணராகவும் ஆனார் என்பது அதிசயமானது. அதிலும் கப்பல் தொழிலைப் பற்றியே தெரியாதவர் அப்படி ஆவதென்றால் நம்பமுடியுமா?

கப்பல் தொழிலில் பிரபலமாகியிருக்கும் அவருடைய பெயர் ஹென்ரிஜே கெய்ஸர் அவருடைய தகப்பனார் ஜெர்மானிக்காரர். ஆனால் அவர் தாய்நாட்டை விட்டு வெகு காலத்துக்கு முன்னதாகவே அமெரிக்கா வந்து குடியறிே விட்டார். கெய்ஸர் பிறந்ததே அமெரிக்காவில்தான். தகப்பனார் செருப்பு தைக்கும் தொழிலைச் செய்து