பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


மதப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார். அங்கு அவர் பலவற்றைப் படித்து தேர்ந்து டாக்டர் படிப்புப் படிக்க நிச்சயித்தார். ஒரு சமயம், அவர் பென்ஸில்வேனியாவுக்குப் போகக் கிளம்பினார். மத்தியில் ஒரு ரயிலிலிருந்து மறு ரயிலுக்கு மாற வேண்டியதிருந்தது. இச்சமயத்தில் அலெக்ஸாண்டர் ஹெர்மன் என்ற பிரபல மந்திரக்காரர் அங்கு வந்திருக்கிறார். அவர் மந்திரக் காட்சிகளை நடத்தி வருகிறார் என்று தெரிய வந்தது. தர்ஸ்டனுக்கு சிறு வயதிலிருந்தே மந்திர வேலைகளில் ஆசையிருந்தது, அதனால், அவர் சொந்த ஊருக்குப் போகாமல் மந்திரக்காரரைக் காணச் சென்றார். ஆனால் அவரைக் கண்டு பேச தர்ஸ்டனுக்கு தைரியமில்லை, இச்சமயத்தில் மந்திரக்காரர் வாங்கிய இடத்திற்கே தானும் டிக்கட் வாங்கினார். பிறகு மந்திரக்காரருடன் அறிமுகம் ஏற்பட்டது. பிறகு இவரும் பிரபல மந்திரக்காரரானார். டிக்கெட் வாங்குவதில் ஏற்பட்ட இந்தத் தவறு தான் அவரைப் பெரிய மந்திரக்காரராக ஆக்கியது.

வயிறு வளர்ப்பதற்காக திருட்டுத் தொழிலிலிருந்து பல தொழில்களைச் செய்து வந்த தர்ஸ்டன் பிற்காலத்தில் செல்வந்தராக இருந்தார். ஆனால், அவ்வளவு செல்வத்தைச் சம்பாதித்தும் அவருக்கு மனம் திருப்தி அடையவில்லை. தம்முடைய இளமைக் காலத்தில் தாம் துன்பப்பட்டது தான் தமக்கு மகிழ்ச்சிகரமான நாட்கள் என்று அவர் கருதுகிறார்.