பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

79


பெற்றதற்காகவே அப்பணம் அவருக்கு அனுப்பப்பட்டிருந்தது. செக்கையும் குறிப்பையும் கண்டதும், ஜாக்லண்டன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சுரந்தது. அவர் தம்முடைய முயற்சி வெற்றி பெற்றதாகக் கருதினார். அதிலிருந்து தொடர்ந்து சலிக்காமல் கதைகள், நாவல்கள் எழுதத் தொடங்கினார். சுமார் ஐந்து வருஷங்களில் அவர் வாசகர்களால் மிகவும் நேசிக்கும் கதாசிரியராகி விட்டார். அவருடைய வருமானமும் அதிகரித்துக் கொண்டே போயிற்று.

ஜாக்லண்டன் இளமையில் வறுமையால் கஷ்டப்பட்டார். சிலர் அவரை வெறுத்து அடித்துத் துரத்தினர். ஆனால், அவர் இலக்கியத் தொழிலை மேற்கொண்டு வெற்றியும் பெற்ற பிறகு, அவரை வாசகர்கள் தங்கள் இலட்சிய புருஷராகக் கொண்டார்கள்.