பக்கம்:வாழ்க்கை.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

101


என்று கிறிஸ்து நாதர் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும்.

‘உயிரைப் பாதுகாத்துக் கொள்பவன் அதை இழப்பான். என் பொருட்டு உயிரைத் தியாகம் செய்பவனே அதைக் காத்துக்கொள்ள முடியும்’ என்ற கிறிஸ்துவின் உபதேசத்தைப் புரிந்து கொண்டு, தன் வாழ்க்கையிலும் அதன் உண்மையைக் கண்டு கொண்டவனுக்கே உண்மையான அன்பு என்ன என்பது தெளிவாகும்.

‘இந்த உலகில் தன் உயிரை வெறுப்பவனே நித்தியமான வாழ்வுக்கு அதைக் காத்துக் கொண்டவனாவான்’ என்று கூறியுள்ளதை உணர்ந்து கொண்டவனே உண்மையான அன்பை அறிவான்.

‘என்னைப் பார்க்கிலும் அதிகமாகத் தந்தையையும் தாயையும் நேசிப்பவன் எனக்கு உரியவனல்லன். எவன் என்னைப் பார்க்கிலும் மகனையும் மகளையும் நேசிக்கிறானோ, அவன் எனக்கு உரியவனல்லன். ‘ஏனெனில், உங்களை நேசிப்பவர்களை நீங்கள் நேசித்தால், அது அன்பன்று; உங்கள் பகைவர்களை நேசியுங்கள் ; உங்களை வெறுப்பவர்களை நேசியுங்கள்.’

தந்தை , மகன், மனைவி, நண்பர்கள் ஆகியோரிடம் கொள்ளும் அன்பினால் மனிதர் தங்கள் தனி நலன்களைத் தியாகம் செய்வதாக அநேக சாதாரணமாக எண்ணுவர். உண்மை அதுவன்று. மனிதர்கள் தங்கள் தனி வாழ்வின் தற்பெருமை வீணான என்று உணர்வதாலும், அவ் வாழ்வுக்கென்று தனி நலனை அடைய முடியாது என்றும் உணர்வதாலுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/108&oldid=1122188" இலிருந்து மீள்விக்கப்பட்டது