பக்கம்:வாழ்க்கை.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

வாழ்க்கை


தன்னலத் தியாகம் ஏற்படுகிறது. ஆகவே, தன்னலத் தியாகத்தின் மூலமே மனிதன் உண்மையான அன்பை அடைகிறான்; அதனால் தந்தை , மகன், மனைவி, குழந்தைகள், நண்பர்களை உண்மையாக நேசிக்க முடிகிறது.

நமக்கும் மேலாக மற்ற உயிர்களை நேசிப்பதே அன்பு-அதாவது நமது மிருக இயல்பின் தனி நலனுக்கு மேலாக அவைகளின் நலனை நாடுவதிலே அன்பு உதயமாகிறது.

பின்னால் சுயநலத்தை அடைவதற்காக இப்போது அதைத் தியாகம் செய்து வைத்தல் தேர்ந்தெடுத்த சிலரிடம் மட்டும் அன்பு செலுத்துவதைப் போன்றது. தன்னலத் தியாகமாக முதிர்ச்சி பெறாததை அன்பென்று சொல்லுதல் பொருத்தமன்று.

அன்பு என்பது உணர்ச்சியின் கொந்தளிப்பு என்றும், அது பகுத்தறிவை மறைத்துவிடும் என்றும் ஜனங்கள் எண்ணுவது சரியன்று. இதற்கு மாறாக, அன்பு பகுத்தறிவிலிருந்தே விளைவது; தெளிவானது; அமைதியான இன்ப நிலையே அதன் இயல்பு. குழந்தைகளுக்கும் பகுத்தறிவுள்ள பெரியவர்களுக்கும் இது இயல்பாயுள்ளது. எல்லா மக்களுக்கும் பரோபகரமான இந்த நிலை குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது; வயது வந்தவர்களுக்குத் தங்கள் சுயநலத் தியாகத்தின் அளவுக்குத் தக்கபடி ஏற்படுகிறது.

‘எல்லாம் எனக்கு ஒன்றுதான் ; எனக்காக எதுவும் வேண்டியதில்லை’ என்று மனிதர்கள் அடிக்கடி சொல்லக் கேட்கிறோம். இப்படிச் சொல்லும் பொழுதே, அவர்கள் மற்றையோரிடம் வெறுப்புக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/109&oldid=1122189" இலிருந்து மீள்விக்கப்பட்டது