பக்கம்:வாழ்க்கை.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

109


வாடி மடியவிட்டு விடுகிறோம். அன்பு குருத்துவிட்டு வளரும்போது, மிகவும் மென்மையான செடியா யிருக்கும். அதைப் பலமாகப் பிடித்து அழுத்தி, ‘இதோ அன்பைக் கண்டுபிடித்து விட்டோம்! அன்பு! அன்பு!’ என்று கூவி அதைக் கசக்கிவிடக் கூடாது. அது மலர்ச்சி பெற்று முதிர்ந்தால் தான் வலிமை பெறும். மனிதர்கள் அதைக் கெடுத்து விடுகின்றனர். அதற்குத் தேவையானது அறிவுச் சூரியனின் ஒளிதான் அதனாலேயே அது வளர்ச்சி பெறுகிறது.

முடியாத முயற்சிகள்

மிருக வாழ்க்கை வெறும் தோற்றம். மாயை என்பதையும், உண்மையான அன்பு நிறைந்த வாழ்க்கையையும் மனிதன் கண்டு கொள்ளும் பொழுது, அவனுக்கு நன்மை உண்டாகிறது. இந்த நன்மையை அடைய மனிதன் என்ன செய்ய வேண்டும் ? சுயநல வாழ்வில் மனிதன் ‘நான்’ என்று கருதும் தனித் தன்மை நாளுக்கு நாள் அழிந்து மரணத்தையே அடைகிறது. இவ்வாறு அழியக்கூடிய மிருக வாழ்வுக்காகவும், ஆசைகளைத் திருப்தி செய்வதற்காகவுமே வாழ்ந்து வரும் மனிதர் வாழ்க்கையின் ஒரே நன்மையான அன்பைப் பெறமுடியாமல் இழக்கின்றனர்.

வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாத இந்த மனிதர், தங்கள் வாழ்க்கை முழுதும் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போராடுவதிலும், இன்பத்தை நாடுவதிலும், துன்பத்தை நீக்குவதிலும், தங்களால் தவிர்க்க முடியாத மரணத்தை விலக்குவதிலும் கழிக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/116&oldid=1122199" இலிருந்து மீள்விக்கப்பட்டது