பக்கம்:வாழ்க்கை.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

5


எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்த நிலைமைகளை அவன் காண்கிறான்.

மனிதன் தன் தனியான இயல்பே வாழ்க்கை என்று கருதி வருகையில், அவ் வாழ்க்கை உலகம் அனைத்தையும் எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. ஆனால், உலகத்தையோ யாரும் எதிர்த்து நிற்க முடியாது. இந்நிலையில் மானிடன் பெறவேண்டுமென்று கருதும் இன்பங்கள் வெறும் நிழல்களாக விளங்குகின்றன. இன்பங்கள் எல்லாம் துன்பத்திலேயே முடிவடைகின்றன. இவற்றால், மனிதன் பாதுகாக்க முடியாத ஒரு வாழ்வைத் தான் கட்டிப் பிடித்து வைத்துக்கொள்ள முயல்வது வீணான வேலை என்பது தெளிவாகின்றது.

சுக துக்கங்கள் எல்லாம் தனக்கே உரியவை என்று தனித்தன்மை பாராட்டி வருபவனுக்கு, அதுவே நன்மைக்கும் வாழ்க்கைக்கும் முக்கியமான காரணமாயிருக்கிறது. ஆயினும் அந்தத் தனி இயல்பினால் நன்மையையோ, வாழ்வையோ பெற முடியவில்லை. அவன் விரும்பும் இன்பமும் வாழ்வும் அவனை மட்டும் பொறுத்திருக்கவில்லை; அவனுக்குத் தெரியாத அந்நியர்களின் தயவினால் அவை கிடைக்க வேண்டியிருக்கின்றன. அவர்கள் எல்லோரும் தன்னைப் போன்றவர்கள் என்ற எண்ணம்கூட அவனுக்குக் கிடையாது. ‘நான்’, ‘எனது’ என்று கருதிக் கொண்டிருக்கும் வாழ்வுக்கு எது உண்மையான ஆதாரமாகத் தோன்றுகிறதோ, அது அழிந்து, எலும்புகளாகவும் புழுக்களாகவுமே மிஞ்சுகின்றது. எது நிலையானது என்று தோன்றுகிறதோ, அந்தத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/12&oldid=1121502" இலிருந்து மீள்விக்கப்பட்டது