பக்கம்:வாழ்க்கை.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

வாழ்க்கை


யான, இடைவிடாத சடத்தின் உருமாறுதலைத் தவிர வேறில்லை என்று அறிவான். மனிதன் தான் அறியாத மரணத்திற்காக அஞ்சவில்லை; ஆனால், அவனுடைய மிருக வாழ்வும் பகுத்தறிவு வாழ்வுமே தெரிந்துள்ள வாழ்க்கையைக் கண்டு தான் அவன் அஞ்சுகிறான். கோளாறுள்ள மனத்திற்குப் பயங்கர உருவங்கள் தோன்றுவதுபோலவே, மரணத்தைப் பற்றிய பயமும் வாழ்க்கையின் முரண்பாட்டினால் ஏற்படுவதுதான்.

‘நான் தீர்ந்துபோவேன். எனக்கு மரணம் நிச்சயம். எனது வாழ்க்கை என்று சொல்லக்கூடிய எல்லாம் மாண்டுவிடும்’ என்று ஒரு குரல் மனிதனுக்கு அறிவுறுத்துகிறது. ‘நான் இருக்கிறேன்; நான் மரிக்க முடியாது; மரிக்கவும் கூடாது’ என்று மற்றொரு குரல் அறிவுறுத்துகிறது.

பயம் மரணத்திலன்று; வாழ்க்கையிலுள்ள முரண்பாட்டிலேயே இருக்கிறது. பின்னால் வரக்கூடிய மரணத்திற்கு மனிதன் அஞ்சுகிறான் என்றால், இப்போதுள்ள மரண நிலையை அவன் பின்னால் ஒத்திப்போட்டுப் பார்த்து அஞ்சுகிறான் என்றே பொருள்படும். மரணத்தைப் பற்றிய எண்ணத்தால் அவன் பயப்படவில்லை. எத்தகைய வாழ்க்கையை அவன் பெறவேண்டும் என்று விரும்புகிறானோ அதைப் பெறுவதற்காகவே பயப்படுகிறான். கல்லறைக்குள் இருப்பவன் மீண்டும் உயிர் பெற்றால், ‘உயிர் இருக்கிறது. ஆனால், நான் மரணத்திலிருக்கிறேன்; இங்கே மரணம் இருக்கிறது!’ என்று கூறுவது போலவே அவன் உணர்ச்சியும் இருக்கிறது. எது இருக்கிறதோ, எது இருக்க வேண்டுமோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/125&oldid=1122347" இலிருந்து மீள்விக்கப்பட்டது