பக்கம்:வாழ்க்கை.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

119


அது அழிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. மானிட உள்ளம் வழி தவறிவிடுகிறது; பயத்தால் நடுங்குகிறது. மரண பயம் உண்மையிலேயே மரணத்தைக் கண்டு ஏற்படும் பயமில்லை என்பதற்கு முதன்மையான உதாரணம், மனிதர் பயத்தினால் தங்களைத் தாங்களே வதைத்துக் கொள்வதைக் கூறலாம். இதனால், அவர்கள் உண்மையான மரணத்திற்கு அஞ்சவில்லை என்பதும், போலி வாழ்க்கையையே அஞ்சுகின்றனர் என்பதும் தெளிவாம்.

தங்கள் வாழ்வு முடிந்தது என்று மக்கள் அஞ்சவில்லை. ஆனால், உடலின் அழிவு அவர்கள் பெற்றிராத உண்மையான வாழ்க்கையின் அவசியத்தையே எடுத்துக் காட்டுகிறது. மக்கள் மரணம் என்பது இருள், ஒன்றுமில்லாத சூனியம் என்று கருதுவதாலே அதற்கு அஞ்சுகிறார்கள்; இருளையும் சூனியத்தையும் மட்டுமே அவர்கள் காண்பதற்குக் காரணம், அவர்கள் உண்மை வாழ்க்கையைக் காணாமையே.

மரணத்தைப் பற்றிய பயங்கரங்கள் வெறும் கற்பனையைத் தவிர வேறில்லை. தைரியமாக இவைகளைப் பற்றிச் சிந்திக்கும் மனிதர்களுக்கு உண்மை விளங்கி விடும்.

‘நான்’ என்று கருதி வந்த உடல் மண்ணில் மறைந்து மண்ணாய்ப் போய்விடுமே என்பது தான் மரண பயம். உண்மையில் ‘நான்’ என்பது எது ? என் உடலையே ‘நான்’ என்று பல ஆண்டுகளாக நான் எண்ணி வந்திருக்கிறேன். ஆனால், என் வாழ்க்கையில் எப்பொழுதாவது ஒரு நேரத்தில் ‘நான் யார்?’ என்று என்னையே கேட்டுக் கொண்டால், என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/126&oldid=1122348" இலிருந்து மீள்விக்கப்பட்டது