பக்கம்:வாழ்க்கை.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

வாழ்க்கை


பற்றிய விஷயமன்று, உள்ளே நிகழும் குணம். எனக்குச் சில உயிர்ப் பிராணிகள் உலகத்தோடு பெற்றுள்ள சம்பந்தங்கள் தெரியவில்லை என்றால், அவைகளின் விருப்பு வெறுப்புகளை நான் அறிய முடியவில்லை என்றே கொள்ளவேண்டும்.

என்னைப் பற்றியும் உலகைப் பற்றியும் நான் பெற்றுள்ள சகல அறிவுக்கும் அடிப்படை, நான் இந்த உலகத்தோடு கொண்டுள்ள விசேஷ சம்பந்தமே. இதன் மூலம் மற்ற உயிர்களும் என்னைப் போலவே உலகத்தோடு கொண்டுள்ள சம்பந்தங்களை நான் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால், உலகத்தோடு எனக்குள்ள விசேஷ சம்பந்தம் இந்த வாழ்க் கையில் ஏற்பட்டதன்று; எனது உடலிலிருந்தோ , அல்லது வெவ்வேறு காலங்களில் தோன்றிய என் உணர்ச்சிகளிலிருந்தோ இது ஆரம்பிக்கவில்லை.

என் உடல் எத்தனை மாறுதல்கள், அடையினும், அவைகளை ஒன்று சேர்த்து ஏகமாகச் செய்வது வெவ்வேறு காலங்களில் தோன்றும் என் உணர்ச்சி. இத்தகைய உடல் அழிக்கப்படலாம்; என் உணர்ச்சியுமே அழிக்கப்படலாம். ஆனால், உலகத்தோடு எனக்குள்ள சம்பந்தத்தை மட்டும் அழிக்க முடியாது. அந்தச் சம்பந்தத்தின் மூலமே ‘நான்’ என்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. அதுவே உலகில் நிலைத்துள்ள சகல பொருள்களையும் நான் அறியும்படி செய்துள்ளது. அதை ஏன் அழிக்க முடியாதென்றால், அது ஒன்றுதான் நிலைத்து நிற்கிறது. அது இல்லாவிட்டால், பல சமயங்களில் தோன்றும் என் உணர்ச்சிகளையோ, என் உடலையோ, என் வாழ்க்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/131&oldid=1122353" இலிருந்து மீள்விக்கப்பட்டது