பக்கம்:வாழ்க்கை.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

125


யையோ, அல்லது பிறர் வாழ்க்கையையோ நான் அறிந்து கொள்ளவே முடியாது. ஆகவே, உடல் அழியினும், உணர்ச்சி அழியினும் உலகத்தோடு எனக்குள்ள விசேஷ சம்பந்தமும் அழியும் என்பதற்கு, இவை சான்றாக மாட்டா-அந்தச் சம்பந்தம் இந்த வாழ்க்கையில் ஆரம்பிக்கவில்லை; இதிலிருந்து தோன்றவுமில்லை.

மரண பயம்

உடல் அழியும்போது ‘நான்’ என்று கருதுவோனும் அழிகிறானா? உடல் மாறினும், உன மாறினும், இந்த ‘நான்’ என்பது ஒரே மனிதன் என்ற தன்மையை உணர்த்துகிறது. ஒரு தற்காலிக உணர்ச்சி நின்றுவிட்டால், எல்லா உணர்ச்சிகளையும் ஒன்று சேர்த்துத் தொகுத்துக் காட்டும் ‘நான்’ அழிந்து விட முடியாது.

உறக்கத்தில் உணர்ச்சி அறவே போய்விடுகிறது. விழிக்கும்பொழுது உணர்ச்சி வருகிறது. முந்தியிருந்த உணர்ச்சியையும்; விழித்தெழுந்த பின் ஏற்படும் உணர்ச்சியையும் ஒன்றுசேர்ப்பது ‘நான்’ ஆகவே, தூக்கத்தில் உடல் அசைவற்றுக் கிடக்கலாம், உணர்ச்சியும் ஒடுங்கலாம். இப்படியிருந்தும் மனிதர்கள் தூங்குவதற்கு அஞ்சுவதில்லை. ஏன்?

முன்னால் பல சமயங்களில் தூங்கியபின் எழுந்திருந்தது போல விழிப்பு நிச்சயம் வந்துவிடும் என்று மனிதன் நம்புவதாக விடை கூறலாம். இது சரியான ஆராய்ச்சியன்று. ஏனெனில், ஆயிரம் தடவை தூங்கி விழித்தவன், ஆயிரத்தோராம் தடவை விழித்து எழா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/132&oldid=1123841" இலிருந்து மீள்விக்கப்பட்டது