பக்கம்:வாழ்க்கை.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

வாழ்க்கை


மலே இருந்து விடக்கூடும். அதை அறிந்திருந்தும் மனிதன் உறங்கச் செல்வதற்கு அஞ்சுவதில்லை. ஏனெனில், உறக்கத்தில் உடலும் உணர்ச்சியும் ஒடுங்கினாலும், ‘நான்’ ஒடுங்குவதுமில்லை; அழிவதுமில்லை.

இத்நிலையில் மனிதன் மரணத்திற்கு மட்டும் ஏன் பயப்படவேண்டும்? மரணத்தில் ‘நான்’ என்று கருதுவதும் அழிந்து விடுவதாக எண்ணுவதால்தான். உடலின் இயக்கமே வாழ்க்கை என்று கருதி வந்ததன் விளைவாக இந்த எண்ணம் ஏற்படுகிறது. உடலின் இயக்கம் காலத்தையும் இடத்தையும் நிலைக்களனாகக் கொண்டது. ‘நான்’ என்பது காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டது. அதற்கு அழிவு ஏது?

விசேஷமாக ‘நான்’ என்று சொல்வது எனக்கும் உலகுக்கும் உள்ள சம்பந்தமே - நான் விரும்புவதிலும் வெறுப்பதிலும் இந்தச் சம்பந்தம் அடங்கியிருக்கிறது. எனது விருப்புக்கும் வெறுப்புக்கும் காரணமான இயல்பு எனக்கு எங்கிருந்து வந்தது? உலகில் பிறப்பதற்கு முன்பே இது ஏற்பட்டிருக்க வேண்டும். இது என் பெற்றோரிடமிருந்தே எனக்கு வந்திருக்க வேண்டும் என்று முதலில் எனக்குத் தோன்றுகிறது. அவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்களிடமிருந்து வந்திருக்கவேண்டும். இவ்வாறே ஆராய்ந்துகொண்டு போனால், இவ்வியல்பு காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாலேயே ஏற்பட்டிருக்க வேண்டும் என்று புலப் படும். இதைத்தான் ‘நான்’ என்று கருதுகிறேன்; உணர்ச்சியால் அறிகிறேன். இந்த ‘நான்’ அழிவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/133&oldid=1123846" இலிருந்து மீள்விக்கப்பட்டது