பக்கம்:வாழ்க்கை.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

வாழ்க்கை


மூலமும் மனிதன் உலகத்தோடு தொடர்பு கொள்கிறான். பகுத்தறிவு உணர்ச்சியின் தொடர்பு ஒன்று தான் தனது வாழ்க்கை என்பதை அவன் அறிவதில்லை. மற்ற இரண்டு தொடர்புகளும் வாழ்க்கையைச் சேர்ந்தவை என்று அவன் கருதுகிறான். சடப் பொருளே பரிணாம வளர்ச்சியில் மிருக உணர்ச்சியாயும், பின்னர் பகுத்தறிவு உணர்ச்சியாயும் உயர்ந்த நிலையை அடைந்திருப்பதாகச் கருதுகிறான். பகுத்தறிவு உணர்ச்சி உச்ச நிலையை அடைந்த பிறகு, கீழிறங்க ஆரம்பித்து, மிருக உணர்ச்சியாக மாறி, அதன் பின் மீண்டும் சடமாக மாறுவதாக எண்ணுகிறான். இந்தத் தவறான கருத்தினால், மிருக உணர்ச்சி அழிவில்லாததாகிறது; ஏனெனில் மிருகம் தன் இனம் அழிவில்லாதவரை நிலைத்திருப்பதாகத்தானே கொள்ள வேண்டும்! உலகத்தோடு சடப்பொருள் கொண்டுள்ள தொடர்பும் அழிவில்லாததாக ஆகின்றது. ஆனால், எல்லாவற்றிலும் முக்கியமான பகுத்தறிவு உணர்ச்சி, நித்தியமானதாயில்லாமல், சடத்திலிருந்து விளைந்த ஒன்றாகவே முடிகிறது!

ஆயினும், மனிதன் இது உண்மையா யிருக்க முடியாது என்று உணருகிறான். இதனால் சாவைப் பற்றிய அச்சம் வருகிறது. பகுத்தறிவு உணர்ச்சி உலகத்தோடு கொண்டுள்ள தொடர்பே வாழ்க்கை என்று நம்பாதவர்களுக்கு, மற்ற இரண்டு தொடர்புகளையும் பற்றி நம்ப இயலாது.

மனிதன், தான் முன்னாலேயே இருந்திராவிட்டால், ஒன்றுமில்லாத சூனியத்திலிருந்தே அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/145&oldid=1122369" இலிருந்து மீள்விக்கப்பட்டது