பக்கம்:வாழ்க்கை.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

வாழ்க்கை


தன் பகுத்தறிவு உணர்ச்சிப்படி நடக்க ஆரம்பித்தால்' மனித சமூகத்தின் முந்திய வாழ்க்கையே அப்படித் தான் நடந்து வந்திருப்பதைத் தெரிந்து கொள்வான். எல்லாவற்றிற்கும் மேலாக அவனுடைய இதயமும் இதை ஏற்றுக் கொள்ளும். அன்பே இதயத்தின் பாஷை.

தன்னலமும் பிறர் நலமும்

வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதை ஆராய்ச்சி அறிவு, சிந்தனை, சரித்திரம், உள்ளுணர்ச்சி ஆகிய எல்லாம் வற்புறுத்துகினறன. ஆயினும் உலகத்தின் கோட்பாடுகளைக் கற்றறிந்த மனிதன் இதை நம்ப மறுக்கிறான்.

‘இது வாழ்க்கையையே துறப்பதாகும். நான் என் தனித் தன்மையை எப்படி இழக்க முடியும்? எனது நன்மையை நான் நாடுவது நியாயந்தானே?’ என்று நம் காலத்து நாகரிக மனிதன் கேட்கிறான்.

சாதாரண மனிதர்களான தொழிலாளர்கள், அறிவை அதிகமாக விருத்தி செய்துகொள்ளாதவர்கள், தங்களுடைய சுய நலங்களையே முக்கியமாகக் கொண்டு பாதுகாப்பதில்லை. இதற்கு நேர்மாறாக சுய நலத் தியாகம் செய்து, பெரும்பாலும் பிறருக்கு உதவுகிறார்கள். ஆனால் பணக்காரர்கள், படித்தவர்கள், நாகரிமானவர்கள் மட்டும் பகுத்தறிவு உணர்ச்சியின் தேவைகளை மறுத்துத் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க வாதம் செய்கிறார்கள்.

படித்து, மெலிந்து சோம்பேறியாயுள்ள மனிதனே தன் தனி உரிமைகளைப் பிடிவாதமாய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/93&oldid=1122172" இலிருந்து மீள்விக்கப்பட்டது