பக்கம்:வாழ்க்கை.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

89


எப்படிக் கவனிக்க முடியும்? அவர்களுடைய அறிவு முழுதும் தங்கள் தேவைகளைப் பெருக்கிக் கொள்வதிலேயே பயன்படுகிறது.

தனி மனிதனின் தேவைகள் அவனுடைய மிருக வாழ்க்கைக்கு உரியவை. மிருக இயல்பின் அவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்வதும் எளிது. ஆனால் மனிதன் தன் அறிவைக் கொண்டு இவைகளை ஆராய்ந்து பெருக்கிக் கொள்வதால், இவை எல்லை யில்லாமல் விரிவடைகின்றன. முறையான வாழ்க்கைக்குத் தேவையானவை எல்லாம் கிடைக்கக் கூடியவை. பறவைகளும் தாவரங்களும் கூட இவைகளைப் பெறுகின்றன. இந்த மிருக இயல்பையே வாழ்க்கை என்றும், இன்பம் என்றும் கொள்வதால் தான் மனிதனின் துயரம் அதிகரிக்கிறது. தேவைகளையே வாழ்க்கையின் இலட்சியம் என்று கருதுவதில் தான் தவறு ஏற்பட்டிருக்கிறது.

மனிதன் தன் தனிப் பண்பாட்டைத் துறக்க வேண்டியதில்லை. ஆனால் அதன் இன்பத்தை மட்டும் துறக்கவேண்டும். அதுவே வாழ்க்கை யென்று கருதவும் கூடாது. அவன் எதிர்பார்க்கும் இன்பம் கிடைக்க வேண்டுமானால், அவன் இதைத்தான் செய்யவேண்டும்.

தன் தனித் தன்மையே வாழ்க்கை என்று எண்ணுவது வாழ்க்கையின் அழிவு என்றும், உண்மையான வாழ்க்கையை அடைவதற்குத் தனி நலனைத் துறக்க வேண்டும் என்றும் மானிட சமூகத்தின் மகா ஞானிகள் ஆதிகாலத்திலிருந்தே போதித்து வந்திருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/96&oldid=1122175" இலிருந்து மீள்விக்கப்பட்டது