பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



21


னர். அஞ்ஞான்று, பெண் தன் முழுத் திறமையையும் பயன்படுத்தவேண்டும். இதுபற்றியன்ருே,

"குடநீர்அட் டுண்ணும் இடுக்கட் பொழுதும்
கடல்நீர் அறஉண்ணும் கேளிர் வரினும்
கடனீர்மை கையாருக் கொள்ளும் மடமொழி
மாதர் மனேமாட்சி யாள் "

என நாலடியாரும் முழங்குகின்றது.

நாட்டிற்கே பெருமை

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன், இளங்கண்டீரக்கோ, இளவிச்சிக்கோ என்னும் இரண்டு மன்னர்கள் ஒரிடத்தில் வீற்றிருந்தனர். பெருந்தலைச் சாத்தனர் என்னும் புலவர் அங்குச் சென்முர். அவர், இளங்கண்டீரக் கோவை மட்டுமே வணங்கிப் பாராட்டினர். உடனிருந்த இளவிச்சிக்கோ, ஏன் என்னே ஏறெடுத்தும் பார்க்க வில்லை ? என்று புலவரைக் கேட்டான். அவலுக்கு அவர் கூறிய பதில் வருமாறு:—

"இளவிச்சிக்கோவே! பண்டைக் காலங் தொட்டே கண்டீரக் கோனுடைய நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள். பாடும் புலவர் வங்துவிட்டால் பாராட்டிப் பரிசுதந் தனுப்புவார்கள். ஆண்கள் மட்டும் அல்லர் பெண்களும் அத்தகையோரே! தம் கணவர் வெளியூருக்குச் சென்றிருக்கும்போது புலவர்கள் வந்துவிடின், கணவர் வரும்வரையும், வந்தவரைக் காக்கவைத்திருக்க மாட்டார்கள். பயனின்றியும் அனுப்ப மாட்டார்கள். உணவு முதலியவற்ருல் உளங்குளிரச் செய்வார்கள். அது மட்டுமா? தம் தகுதிற் கேற்பப் பெண்யானைக ஆள அணிக்லன்களால் அலங்கரித்து அவற்றைப் பரிசாக அளிப்பார்கள். அத்தகைய உயர்ந்த மனப்