பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

வர்கள் பெண்கள்; ஆண்கள் அவர்களே வருத்தித் தம் விருப்பம் போல் வேலை வாங்கிக்கொள்ளலாம் என்றெண்ணுவதோ, பேசுவதோ பெருந்தவறு. வேண்டாம் என்ற பெண்டாட்டி கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம், என்றபடி இல்லாமல், ஆடவரும், பெண்டிரின் தொண்டிற்கு ஒத்துழைத்து, அவர்களே நன் முறையில் நடாத்த வேண்டும். அப்போதே பெண்மக்களின் வாழ்க் கையும் பொலிவுபெறும்.

வாழ்பவர் யார்?

வாழ்க்கை ஒவியர்களாகிய கணவனும், மனே வியும், ஒருவரையொருவர் காத்தும், விருந்தோம் பியும், நன்மக்களைப் பெற்றுகன் முறையில் வளர்த்தும், உழைத்து ஊதியம் திரட்டி நல்வழியில் செலவிட்டும் புகழுடன் வாழவேண்டும். புகழ் இல்லாவிடினும், இகழ் உண்டாகாமலாவது தம் மைக் காக்க வேண்டும். மிகப்பெருஞ் செல்வராய் மாட மாளிகையில் வாழ்வதுதான் புகழ் வாழ்க்கையென்றும், வறுமையால் வாடும் ஏழைகளின் வாழ்க்கை இகழ் வாழ்க்கையென்றும் சொல்லவே முடியாது. செல்வராயினும், கணவனும் மனைவியும் ஒற்றுமையும், உள்ளன்பும் இன்றிச் சச்சரவு இட்டுக்கொள்ளும் வாழ்க்கையே வசை வாழ்க்கையாகும். ஏழையராயினும், இருவரும் ஒற்றுமையும், உள்ளன்பும் கொண்டு, நல்லோர் என்னும் பெயர் பூண்டு வாழும் வாழ்க்கையே இசை வாழ்க்கையாகும். செல்வப் பெண்ணுயினும் வசையுடன் வாழ்பவளே வாழாதவள். ஏழைப் பெண்ணு