பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


யினும் இசையுடன் வாழ்பவளே வாழ்பவள். இதை நான் கண்டு பிடித்துச் சொல்லவில்லை.

"வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசை ஒழிய
வாழ்வாரே வாழா தவர்"

என்பது திருவள்ளுவரின் பொய்யா மொழி. எனவே, காதலர் இருவரும் கருத்தொருமித்து, கடமையுணர்ந்து, நல்வாழ்வு வாழ்ந்து, வாழ்க்கை ஒவியர்களாகத் திகழ்வார்களாக!

மங்கள விளக்கம்

"மனைக்கு விளக்கம் மடவார் ; மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர் ; மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே ; கல்விக்கும்
 ஒதில் புகழ்சால் உணர்வு"

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக் !

——

பிரீ பிரின்டர்ஸ் 147,பவழக்காரத் தெரு,சென்னை 1.