பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

வாழ்க்கை நலம்


முதலில் கெட்டவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். அதன் பிறகுதான் அவர்கள் நாம் சொல்வதைக் கேட்பார்கள்; திருந்துவார்கள். வாழ்க்கையும் பயனுடையதாகும்.

        "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண
         நன்னயம் செய்து விடல்" (குறள்—314)

என்ற திருக்குறளை நோக்குக. இந்தத் திருக்குறளில் “ஒறுத்தல்” “அவர் நாண” என்ற சொற்கள் உடன்பாட்டுச் சொற்கள். இந்தச் சொற்களைச் கையாள்வதன் மூலம் பழிவாங்கும் உச்சாணிக் கொம்பிலிருப்பவன் இறங்கி வருவான்.

அவனுடைய சினம் தணியும். பழிவாங்கும் மனப்போக்கிலும் மறு ஆய்வு தலைகாட்டும். இந்த இதமான—இங்கிதமான சூழ்நிலையில் அவனுக்கு ஒரு நன்மை செய்தால் மகிழ்வான்; மாறுவான்; என்றும் நல்லவனாக இருப்பான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/114&oldid=1133246" இலிருந்து மீள்விக்கப்பட்டது