பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வாழ்க்கை நலம்


கதிரொளியில்—வெப்பத்தில் மாற்றங்கள் இல்லை. கதிரொளி காய்வதில்லை. அதனைத் தாங்கும் ஆற்றலற்றவை அழிகின்றன. அதுபோல சமுதாய வரலாறு, ஒரு தன்மைக்காக இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்திற்கு அடிப்படை மானுடத்திற்குரிய அறமேயாகும். அன்பின் ஆற்றலுடையவர் வாழ்கின்றனர். அன்பாற்றலற்றவர்கள் அழிகின்றனர். "ஆற்றலுடைமையே வாழும்" என்பது ஒரு உண்மை.

ஆதலால், வாழும் மானுடத்திற்கு எலும்பனைய அன்பினை அனைவரும் போற்றுமின்!

       "என்பி லதனை வெயில்போலக் காயுமே
        அன்பி லதனை அறம்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/48&oldid=1133030" இலிருந்து மீள்விக்கப்பட்டது