பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைக்கு வந்தது

9


இதைச் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அந்த ஆசாமி சாட்சாத் ஆறுமுகம்தான் என்பதை அறிந்து கொண்டேன். அவனது உடையும், அவன் புகுந்திருக்கும் வேலையுமே கொஞ்ச முன்பாக அவனை என்னால் அறிய முடியாதபடி செய்துவிட்டன.

“ஆமாம், ஆறுமுகத்திற்கும், இந்த வேலைக்கும் என்ன சம்மந்தம் ?” என்றேன்.

“அடடா, இது தெரியாதா? ஜார்ஜ் டவுனிலே பாதி நாவிதர்களுக்குமேல் மேளம் வாசிக்கிறார்கள். இது அவர்களுடைய ஸைட் பிசினஸ் (Side Business)” என்றான் நாராயணன்.

ஆறுமுகத்துக்கும், சங்கீத உலகத்துக்கும் நேரடி யான சம்மந்தம் உண்டு என்பதை அப்பொழுதுதான் கண்ணாரக் கண்டேன்.

ஆறுமுகம் ரொம்ப நல்லவன். மரியாதை காட்டுவதில் அவனுக்குச் சமானம் அவன்தான். ‘நீ’, ‘உனக்கு என்று யாராயிருந்தாலும் மரியாதை இல்லாமல் பேசும் பட்டணத்தில், ‘வாங்க’, ‘இருங்க’ என்று மரியாதை காட்டினால் யாருக்குத்தாம் அவன் மேல் பிரியம் இல்லாதிருக்கும்? அத்துடன், கண்ட இடத்திலெல்லாம் நமக்குச் சலாம் போடுவதும், ஸலூனுக்குச் சென்றால் மிகுந்த மரியாதையுடன் ஆசனம் தந்து உட்காரச் செய்வ தும், இடையிடையே தமாஷாகப் பேசுவதுமே அவனுக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்துவிட்டன.

அவனுடைய ஸலூனுக்குப் பெயர் ‘மிலிடெரி ஹெயர்கட்டிங் ஸலூன்’ என்றிருந்தாலும், யுத்த காலத் தில் கூட மிலிடரியைச் சேர்ந்தவர்கள் அங்கே விஜயம் செய்ததில்லை. காரணம், அது ஒர் ஒதுப்புறமாக இருப்பதுதான். இருந்தாலும் எப்போதும் அங்கே ஒரே