பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

வாழ்க்கை விநோதம்


“ஏன் ? அப்படி ஒன்றும் இல்லையே!”

“அப்படின்ன நீங்க இன்னும் ரொம்பத் தங்கமான வங்க, சார்.”

“என்னப்பா அப்படிச் சொல்கிறாய் ?”

“இல்லை, அந்த அழுகைக் குரலைக் கேட்டவுட னேயே மளமளவென்று கண்ணிர் வந்துவிட்டதே!”

“அனுதாபத்தால் கண்ணீர் வரவில்லை. கத்தியின் செய்கையால்தான் கண் கலங்குகிறது” என்பதை நான் அவனிடம் சொல்லியிருப்பேன். ஆனாலும், என்னுடைய தங்கமான குணத்தைக் கெடுத்துக்கொள்ள விரும்பாது சும்மா இருந்துவிட்டேன்.

‘ஏன் சார், நீங்க ஏன் மீசை வச்சுக்கப்படாது?’ என்று ஒரு தடவை கேட்டான்.

எனக்கும் ஆசைதான், பாரதியாரைப் போல மீசை வைத்துக்கொள்ள. அத்துடன் மூக்குக்குக் கீழே ஆறு முகத்தின் கத்தி போகாது தடுத்தும் விடலாமல்லவா ?

“வைத்துக்கொள்ளலாம். ஆனாலும் வீரமும் இருக்க னும், மீசையும் இருக்கணும். என்னைப் போல ஆளுக் கெல்லாம் மீசை எதுக்கப்பா? வேண்டாம்” என்றேன்.

“ஆமாம் சார், வாஸ்தவந்தான். கரப்பாம்பூச்சி கூடத்தான் மீசை வச்சிருக்கு” என்றான் சிரித்துக் கொண்டே.

இவ்வளவு பிரியமாக இருந்தாலும் ஆறுமுகம் எனக்கு இப்பொழுது கொஞ்சம் பிடிக்காதவனாகி விட்டான்.

காரணம், ஒருநாள் எனக்கு கிராப் வெட்டிக் கொண்டிருந்தான். வீதியில் மேளச் சத்தம் கேட்டது. ஆறுமுகமும் மேளக்காரர் கூட்டத்தில் ஒருவனாதலால் மேளத்துக்குத் தக்க தாளம்போட ஆரம்பித்துவிட்டான்.