பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைக்கு வந்தது

15


கையால் அல்ல ; கையில் வைத்திருந்த கத்திரிக் கோலால்! டக் டக் என்று சப்தம் உண்டாக்கி ஷவர வேலையோடு தாளம் போடும் வேலையையும் சேர்த்துக் கொண்டான் ; நானும் இதில் லயித்துவிட்டேன்.

கொஞ்ச நேரம் சென்று பார்த்தால், ஐயோ! என் தலைமயிர் சில இடங்களில் ரொம்பக் குட்டையாகவும், சில இடங்களில் அடியோடும் அலங்கோலமாக வெட்டப் பட்டிருப்பது கண்ணாடியில் தெரிந்தது.

இதைப் பார்த்ததும் எனக்குக் கோபம் அபாரமாக வந்துவிட்டது. வெளியில் தலைகாட்ட முடியாதே என் பதை நினைத்து வருந்தினேன்.

இருந்தாலும் ஆறுமுகம், “ சார், மன்னிச்சுடுங்க" சார், தெரியாமல் பண்ணிட்டேன். ‘சம்மர் கிராப்’ பண்ணிவிடலாம் சார்,” என்று யோசனை சொல்ல ஆரம்பித்தான்.

எப்படி? மழை காலத்தில் ‘சம்மர் கிராப்’ செய் கிறானாம் ! என்ன செய்வது ? இப்பொழுது அவன் யோசனைப்படியே சம்மர் கிராப் வைத்து விரைவாக வளர்த்து வருகிறேன்.

நல்ல வேளை, தாளம் போடும்போது மெய்மறந்து காது, மூக்கு இவைகளைக் கத்தரிக்காது, தலைக்கு வந்ததைத் தலைமயிரோடு விட்டுவிட்டானே !