பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வாழ்க்கை விநோதம்


கடைசியாக ஒரு வண்டி காலியாக இருந்தது என் கண்ணில் பட்டது. என் நண்பர்களைக் கூட்டிக் கொண்டு அங்கே ஒடினேன்.

“எவனுக்காவது இது தெரிந்ததா! எல்லாம் செம்மறி ஆட்டுக் கூட்டம்தான். இவ்வளவு இடம் இருக்கிறது. பஞ்சு மூட்டைபோல் போய் அடைகிறார்களே!” என்று கூறிக்கொண்டேயிருந்தேன்

என் நண்பர்களும், “உன் புத்திக்கு மெச்சினோம்” என்று தட்டிக்கொடுத்தனர். சாமான்களை இடம் பார்த்து அடுக்கிக்கொண்டே யிருந்தோம்.

அப்பொழுது அங்கே வந்த ஒரு ரயில்வே உத்தி யாகஸ்தர், “யாரது? நீங்க பொம்மனாட்டிகளா?” என்று கேட்டார். இருட்டாயிருப்பதால் தெரியவில்லை போலிருக்கிறது என்று நினைத்து, “இல்லை. நாங்கள் ஆண்கள்” என்றேன்.

“அப்படின்னா, பொம்மனாட்டிகள் வண்டியிலே உங்களுக்கு என்ன வேலை? போர்டு போட்டிருக்கிறது தெரியவில்லை?” என்றார்.

அவ்வளவுதான்; பேச்சு மூச்சு இல்லாது (மூச்சு இல்லாது என்பதை சும்மா எதுகைக்காகக் கூறினேனே தவிர, உண்மையில் அல்ல) கீழே இறங்கி வேறு இடம் பார்த்தோம்.

ரொம்ப நேரம் அலைந்தோம். கடைசியாக ஒரு வண்டியில், தவறுதலாக வண்டி மாறி உட்கார்ந்த ஐந்தாறு பேர் இறங்கினர். அந்த இடத்தை நாங்கள் வெற்றிகரமாகக் கைப்பற்றிக்கொண்டோம்.

வண்டியில் வந்து ஏற வருபவர்களை யெல்லாம், “அடடா, அந்தக் கம்பார்ட்மெண்டில் காலி இருக்கிறதே! கடைசி வண்டி காலியா யிருக்கிறதே! பின்னால் நாலு வண்டிகள் புதிதாகக் கோக்கிறானே!” என்றெல்லாம்