பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வாழ்க்கை விநோதம்


சோமு சென்றதும் ரயிலும் நகர்ந்தது. நேரம் ஆக ஆக ஜனங்கள் உறங்க ஆரம்பித்தனர். சிலர் நின்று கொண்டும், சிலர் உட்கார்ந்துகொண்டும், சிலர் முழங்காலைக் கட்டிக்கொண்டும் உறங்கினர். சிலர் ஒருவர் மேல் ஒருவராகச் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர். குழந்தைகள் சீட்டுகளை மடக்கி, வரிசையாக நிற்க வைத்து, கடைசிச் சீட்டைத் தள்ளினதும், ஒன்றன் மேல் ஒன்றாய் எல்லாச் சீட்டுகளும் விழுந்து கிடக்கு மல்லவா? அதுபோல இருந்தது அந்தக் காட்சி.

எனக்குக் கீழே படுத்து உறங்கினால்தான் தூக்கம் வரும். ஆனால் படுப்பதற்கு இடம் ஏது?

மகாத்மா காந்தி, முன்பு ஒரு தடவை ரயிலில் மூன்றாவது வகுப்பில் பிரயாணம் செய்தாராம். கூட்டம் அதிகமில்லாததால், காலை முடக்கிக்கொண்டு நன்றாகத் தூங்கிக்கொண் டிருந்தாராம். ஒரு ஸ்டேஷனில் கூட்டம் வந்து ஏறியது. அந்தக் கூட்டத்தில் வந்த ஒரு பட்டிக்காட்டு ஆசாமி, காந்திஜியை எழுப்பி, “ஏனய்யா, இது என்ன உங்க அப்பன் வீட்டு வண்டின்னு நினைச்சிக்கிட்டியோ? ஏந்திருச்சு உக்காரய்யா,” என்றானாம்.

காந்திஜி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு உட்கார்ந்தாராம். அவர்தாம் காந்தி என்று அப்போது அவனுக்குத் தெரியாது. கொஞ்ச நேரத்தில், இவன் குஷி வந்து, “காந்தியோ பரம ஏழை சன்யாசி” என்று பாடுகிறோ மல்லவா, அந்த மாதிரி ஒரு பாட்டைப் பாட ஆரம்பித்து விட்டானாம். இது கட்டுக் கதையாகத்தானிருக்கும்.

என்னவாயிருந்தாலும், சாதாரண காலத்திலேயே யாராவது படுத்திருந்தால், “ஏனையா, எழுந்திருக்கிறீரா அல்லது எழுந்தருளப் பண்ணட்டுமா?” என்று கேட்