பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உல்லாசப் பிரயாணம்

21

பார்கள். நெருக்கடி காலத்தில் சொல்லவேண்டியதே இல்லை.

போட்டோவுக்கு உட்காருவதுபோலவே ஆடாமல் அசையாமல் உட்கார்ந்துகொண்டிருந்தேன். இந்த லட்சணத்தில் மழை வேறு ஆரம்பித்துவிட்டது. ரயிலில் ஒட்டை அதிகமானதால், எல்லோரும் எழுந்து நிற்க ஆரம்பித்தனர். “சாதாரணமாகவே, மாமியார் அக்கிலிப் பிக்கிலி (பிடாரி), கள்ளு குடித்தாளாம்; தேளும் கொட்டியதாம்” என்று சொல்லுவார்கள். அது போலவே உள்ள கஷ்டத்தோடு, இந்தக் கஷ்டமும் சேர்ந்துவிட்டது. ஆனாலும் என்ன செய்வது? பொறுத்தவர்தாமே பூமியாள முடியும் ?

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தோம். ஒரு வழியாகத் தில்லை மூதூரின் எல்லையும் வந்து சேர்ந்தது. சிறிது நேரத்தில், ஸ்டேஷனும் வந்துவிட்டது. அவசர அவசரமாகக் கீழே இறங்கி மூச்சுவிட ஆரம்பித்தோம்.

அடேயப்பா, நடராஜப் பெருமானைத் தரிசனம் செய்ய எவ்வளவு சிரமம்! எத்தனை இடையூறுகள்! இவ்வளவையும் நாங்கள் மீட்டு வந்துவிட்டோம். இதற்காகவாவது எங்களுக்கு நடராஜர் மோட்சம் அளிப்பார் என்பது நிச்சயம்