பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறதியின் லீலை


“ஏண்டா சுந்தரம், எங்கே அந்த லெட்டரை வைத்தாய்?”

“ லெட்டரா? ஞாபகமில்லையே அப்பா. இங்கே தானே வைத்ததாக ஞாபகம்.”

“என்ன, எது கேட்டாலும் ஞாபகமில்லை என்றே சொல்லுகிறாய் ? உப்புப் போட்டுச் சோறு தின்றால் அல்லவா ஞாபகம் இருக்கும் ? ஏண்டா, இன்றைக்கு உப்புப் போட்டுக்கொண்டாயா சாதத்துக்கு ?”

“அதுவா ? ஞாபகமில்லையே அப்பா,”

சுந்தரம் என்ன, அநேகமாக எல்லோருக்குமே மறதி உண்டுதான். சிலருக்கு அதிகம்; சிலருக்குக் குறைவு.

“எனக்கு ஞாபக மறதிமட்டும் வந்துவிட்டால், உடனேயே உயிரை விட்டுவிடுவேன்" என்று ஒருவர் சொன்னாராம். அவர் போலவே எல்லோரும் சபதம் செய்துகொண்டு, அதைச் செயலிலும் காட்ட ஆரம்பித்துவிட்டால் ஆயிரத்துக்கு ஒருவர் இருப்பதுகூடக் கஷ்டம்தான். அணுக் குண்டுகளை இந்த உலகத்தில்