பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறதியின் லீலை

23


எல்லா இடங்களிலும் போட்டுவிட்டால் எத்தனை பேர் இருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்ப்பதைப் போலத்தான் ஆகும்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களில் சிலர், பாடம் சம்பந்தமாகப் படிப்பவற்றையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு விடுகிறார்கள். ஆனால் சட்டையை எங்கே போட்டோம், வேஷ்டியை எங்கே வைத்தோம் என்பவற்றை மட்டும் மறந்துவிடுகிறார்கள்.

இரு நண்பர்கள், ஒரு விஷயம் பற்றி சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். நடுவில் வேறொருவர் வந்து ஏதாவது கேட்டுவிட்டுப் போய்விடுவார். அவர் போன பிறகு, பேச்சைத் திரும்ப ஆரம்பிப்பதற்காக முன்பு பேசியவர் முயல்வார். ஆனால், விஷயம் ஞாபகத் திற்கு வராது.

“எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்?” என்பார் எதிரே கேட்டுக்கொண்டிருந்தவரை.

“அதுவா, எதையோ பற்றியல்லவா பேசினோம்?” என்று அவரும் மேலே பார்ப்பார்.

ரொம்ப நேரம் ஞாபகப்படுத்தியும் விஷயம் வராது ! கடைசியில் வேறு ஒன்றைப்பற்றி ஆரம்பிப்பார்கள்.

ஒரு பத்திரிகை ஆபீஸிற்கு ஒருவர் சந்தாப் பணத்தை மணி ஆர் டரில் அனுப்பியிருந்தார். பத்திரிகை ஆபீஸ் குமஸ்தா, மணி ஆர்டர் பணத்தையும், கூப்பனையும் வாங்கிக்கொண்டார்.

ஆனால், சந்தாப் பதிவு புத்தகத்தில் பதிவு செய்யும் போது, பணம் அனுப்பியவரின் விலாசம் தெரியவில்லை. கூப்பனில் கையெழுத்து மட்டுந்தான் இருக்கிறது. விலாசம் முழுவதும் வேண்டுமானால், மணி ஆர்டர் பாரத்தைப் பார்த்து ஏற்கெனவேயே குறித்து