பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வாழ்க்கை விநோதம்


வைத்துக்கொள்ள வேண்டாமா ? அதைத்தான் மறந்து போய் விட்டாரே, இந்தக் குமாஸ்தா! ஆனாலும் என்ன சந்தாக் கட்டியவர் பத்திரிகை வரவில்லை என்று புகார் எழுதமாட்டாரா? அப்பொழுது, அந்தக் கடிதத்திலுள்ள விலாசத்தைப் பார்த்துப் பத்திரிகையை அனுப்பி விட்டால் போகிறது!

உயர்ந்த பதவியில் இருக்கும் சர்க்கார் உத்தியோகஸ்தர் ஒருவரை, ஒரு நண்பர் பார்க்க வேண்டியதிருந்தது; கடிதம் எழுதினார். ஒரு நாள் குறித்து, அன்று வந்து பார்க்கும்படி பதில் வந்தது.

நண்பர் அப்படியே சென்றார். அந்த உத்தியோகஸ்தரின் அறைக்குள் நுழைவதற்கு வெகு நேரம் வெளியே காத்திருந்து, கடைசியாகப் பியூனின் தயவால் உள்ளே நுழைந்தார்.

விஷயம் என்னவென்று கேட்டார் உத்தியோகஸ்தர், நண்பர் பதில் சொன்னார்,

“சரி, நாங்கள் தந்த அனுமதிச் சீட்டைக்கொண்டு வந்தீரா? கொண்டுவரும்படி எழுதியிருந்தோமே ?” என்றார் உத்தியோகஸ்தர்.

நண்பருக்கு இதைக் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது. ஆனாலும் என்ன செய்வது? அவர்கள் எழுதியது உண்மைதான். ஆனால் மறந்துவிட்டாரே அந்த நண்பர்?

அவருடைய தயக்கத்தைக் கண்ட உத்தியோகஸ்தர், “என்ன, கொண்டுவர மறந்துவிட்டீரா? அது இல்லாமல் எப்படிக் காரியம் முடியும்? சரி, இன்னும் பத்து நாட்கள் சென்று வந்து பாரும். நான் இன்று பம்பாய்க்குப் போகிறேன்” என்று ஒரே போடாய்ப் போட்டுவிட்டார்.