பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறதியின் லீலை

25


நண்பர் ரயிலுக்குக் கொடுத்த பண நஷ்டத்தோடு காரியமும் வெற்றி பெறவில்லையே இந்த மறதியால்!

ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தர், தம் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் மறதியாக, ‘தங்கள் தாழ்மையுள்ள ஊழியன்’ என்று எழுதிக் கையெழுத்துப்போட்டு அனுப்பிவிட்டாராம். மனைவி அந்த வரியை ஒரு முறைக்குப் பலமுறையாகப் படித்துப் பார்த்தாள். அவள் முகத்தில், மெல்ல ஒரு புன்னகை அரும்பியது. “உம்: இதைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு இத்தனை நாட்களாயிற்றா ?” என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாளாம். எப்படியிருக்கிறது ஒரு மனிதனை, இந்த மறதி மனைவிக்கு அடிமையாக்கும் லீலை !

இந்த மறதி, சாதாரண மனிதர்களுடைய வாழ்வில் தான் காணப்படுகிறது என்று நினைக்காதீர்கள். பெரிய பெரிய மனிதர்களுடைய வாழ்விலே இது பங்கு கொண்டு விடுகிறது.

ஸர் வால்டர் ஸ்காட் என்ற பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஒரு சமயம், பத்திரிகையில் வெளிவந்த தம்முடைய பாட்டு ஒன்றைக் கண்டு, தாமே வியந்து போற்றி ஆனந்திக்கத் தொடங்கிவிட்டார். “அவர் எழுதிய பாட்டை அவர்கூடப் போற்றாமல் என்ன செய்வார்?” என்று எண்ணிவிடாதீர்கள். அந்தப் பாட்டு பைரன் என்ற கவிஞர் இயற்றியதாக்கும் என்று கருதியே ஸ்காட் போற்றி னாராம்! ஸ்காட்டின் ஞாபகசக்தி அவ்வளவு அபாரம்!

பிரபல விஞ்ஞானி ஒருவர், ஒரு தடவை, ஏதோ ஓர் ஆராய்ச்சியில் ஆழ்ந்திருந்தாராம். அவருக்கு எதிரே காப்பி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவரைப் பார்க்க ஒரு நண்பர் வந்தார். விஞ்ஞானி ஆராய்ச்சி