பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வாழ்க்கை விநோதம்

யில் இருந்ததால் அவரைக் கவனிக்கவில்லை. வந்தவர் காப்பியைக் குடித்துவிட்டுக் கோப்பையைக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார். விஞ்ஞானி ஆராய்ச்சி முடிந்து காலிக் கோப்பையைப் பார்த்துவிட்டு, “அடடா, அப்பொழுதே குடித்துவிட்டேன் போலிருக்கிறது. ஞாபகமில்லாமல் அல்லவா, இப்பொழுது கோப்பையை எடுக்கப்போனேன்!” என்று எண்ணிச் சிரித்தாராம். அவ்வளவு ஞாபகசக்தி அவருக்கு!

[1]நம் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இருக்கிறாரே, அவருடைய வாழ்க்கையில்கூட இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்துவிட்டது.

அவர் கல்லூரியில் படிக்கும்போது, எல்லாப் பாடங்களிலும் முதலாவதாகத் தேறிவிடுவார். ஆனல் கணக்குமட்டும்தான் வராது. இவர்தம் நெருங்கிய பள்ளித்தோழர் ஒருவர் இவருக்கு நேர் எதிரிடை: கணக்கில் புலி, ஆனால் மற்ற ஒரு பாடமும் வராது.

கணக்குப் பரீட்சையன்று நண்பர் சொன்னாராம்;

“டேய் இராமலிங்கம், எனக்குக் கணக்கு மட்டும் தான் வருகிறது. பாக்கி ஒன்றிலும் நான் தேறப் போவதில்லை. உனக்கோ கணக்குமட்டும்தான் வரவில்லை. ஒன்று செய்தாலென்ன ? நான் கணக்குப் பேப்பரை எழுதி உன் பெயர் போட்டு வைத்துவிடுகிறேன். அதேபோல், நீ உன் கணக்குப் பேப்பரில் என் பெயர் போட்டு வைத்துவிடேன். நீயாவது தேறுவாய்” என்று தியாகம் செய்ய முன் வந்தாராம்.

கவிஞர் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் கடைசியில் மேலே சொன்னவாறே, ஒரு கூட்டு


  1. இந்த நிகழ்ச்சி, கவிஞரின் “என் கதை” யில் இல்லை. ஆனால் சென்னையில் நடந்த கூட்டமொன்றில், கவிஞராலேயே வெளிப்படுத்தப்பட்டது.