பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறதியின் லீலை

27


ஒப்பந்தம் செய்துகொண்டு பரீட்சை எழுதிவிட்டார்கள்.

கொஞ்சநாள் சென்று கவிஞருடைய வீட்டுக்குக் கணக்கு வாத்தியார் வந்தார்.

“ஏண்டா இராமலிங்கம், என்னடா கணக்குப் பேப்பர் இரண்டு எழுதி வைத்திருக்கிருய்?” என்று கேட்டார்.

அப்பொழுதுதான் கவிஞருக்கு உண்மை புரிந்தது.

நண்பன், தன்னுடைய பெயரைக் கணக்குப் பேப்பரில் எழுதி, சத்தியத்தைக் காப்பாற்றி விட்டதையும், தான் நண்பன் பெயரை எழுத மறந்து, தன் பெயரையே எழுதிவிட்டதையும் உணர்ந்தார்.

ஆனால் இப்பொழுது என்ன செய்வது? வாத்தியாரிடம் சரணகதி அடைந்து, குற்றத்தை ஒப்புக்கொண்டார். இருவரும் மன்னிக்கப்பட்டனர்.

என்னைக்கூட இந்த மறதி எத்தனையோ தடவைகளில் படாதபாடு படுத்திவைத்துவிட்டது. ஆனால் ஒரு சமயம் என்னைக் காப்பாற்றியும்விட்டது! எப்படித் தெரியுமா ?

முக்கியமான ஒருவரின் விலாசத்தைக் குறித்துக் கொடுத்து, அந்த விலாசத்துக்கு ஒரு கடிதம் எழுதும் படி ஆபீஸ் மானேஜர் கட்டளையிட்டிருந்தார். அவர் தந்த சீட்டை எங்கேயோ வைத்து மறந்துவிட்டேன்.

மானேஜர், நான் கடிதம் எழுதவில்லை என்பதை அறிந்து கேட்டார். விஷயத்தைச் சொன்னேன். அபாரமாகக் கோபம் வந்துவிட்டது, அவருக்கு.

“ என்ன, உம்மிடம் எந்தக் காரியம் சொன்னாலும் இப்படித்தான். மறந்துபோச்சு, மறந்துபோச்சு என்று சொல்லியே வருகிறீர். மாதம் பிறந்தவுடன் சம்பளம் வாங்க மட்டும் மறந்துவிடுகிறீரா? “Thirty days have