பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சலவைத் தொழிலாளி


“என்னடா, இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. ஒரு இடத்துக்கும் போகல்லியா?”

“ போகத்தான் வேணும். ஆனல்...... ”

“என்ன, ஆனால் என்று இழுக்கிறாய்?"

“இன்றோடு 25 நாட்களாச்சு. இன்னும் வண்ணான் சலவை கொண்டுவந்த பாடில்லை.”

“ வண்ணான் வரவில்லையென்ருல் சும்மா இருந்தால் வந்துவிடுவானா ? நீ உரக்கப் பாட ஆரம்பியேன். வண்ணான் வந்துவிடுகிறான்!”

இந்த மாதிரி என்னைக் கழுதை என்று சொல்லாமல் சொல்லிவிட்டான் தியாகராஜன். இதைச் சொன்னதுமே எனக்கு ரொம்ப ஆத்திரம் வந்துவிட்டது. இருந்தாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்துவைத்தேன். காரணம், வண்ணான் வராவிட்டால், அவனிடம் சட்டை வேஷ்டி ஒசி வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்ததுதான்.

என்னுடைய சலவைத் தொழிலாளி சண்முகம் இருக்கிறானே, அவன் வேஷ்டிகளையெல்லாம் ஒரு வாரத்