பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பின் பெருக்கு


‘இனிது, இனிது, ஏகாந்தம் இனிது’ என்பார்கள். ஆனால், என்னை வந்து ஒரு பத்திரிகை நிருபர் பேட்டி கண்டு, இது விஷயமாக அபிப்பிராயம் கேட்டால், நான் இதை முழுமனதுடன் மறுப்பேன் !

பாருங்களேன். சினிமா, பீச், கடைவீதி எந்த இடத்துக்குச் செல்லவேண்டுமானாலும் துணைவேண்டியதிருக்கிறது. அடுத்த வீடு, எதிர் வீடு செல்வதாய் இருந்தாற்கூடத் துணையில்லாமல் முடியவில்லை. இப்படியிருக்கும்போது, எப்படியையா, ‘இனிது, இனிது, ஏகாந்தம் இனிது,’ என்று நான் சொல்லமுடியும்? அப்படியே நான் ஏற்றுக்கொண்டாலும் அது, ‘சிந்தையில் கள் விரும்பிச் சிவ, சிவா’ என்பது போலல்லவா ஆகிவிடும்? ஏகாந்தம் என்பதெல்லாம் மூக்கைப் பிடிக்கும் முனிபுங்கவர்களுக்கே ஏற்றது.

ஒருநாள் சாயங்காலம், கற்பக விநாயகர் கோயிலில் சுந்தர சாஸ்திரிகள் ராமாயணம் படிப்பதாக யாரோ கூறியது ஞாபகத்திற்கு வந்தது. செல்வது என்று தீர்மானித்தேன். ஆனால் துணை வேண்டுமே? அடுத்த