பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பின் பெருக்கு

37


இல்லாவிட்டால்......” என்று இழுத்தார்.

“இதேதடா, கட்டுச் சோற்றில் வெருகு வைத்துக் கட்டிய கதையாய்ப் போய்விட்டதே!” என்று மரியாதையாய் நாரயணைனை அழைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டேன்.

கொஞ்சதூரம் சென்றோம். அப்பொழுதுதான், கோயில் வாசலில் எனது செருப்பை விட்டுவிட்டு வந்தது, ஞாபகத்திற்கு வந்தது. இருவரும் திரும்பினோம். ஆனால் கோயில் வாசலில் எனது மிதியடியைக் காணவில்லை !

நாராயணனைப் பார்த்து, “ எங்கேயடா போயிருக்கும் என் செருப்பு ?” என்று கேட்டேன்.

“எங்கே போயிருக்கும்? உன் மேலுள்ள அன்பின் பெருக்கால், யாராவது ஒரு பரதன் அடித்துக்கொண்டு போயிருப்பான்!” என்று சாவதானமாகக் கூறினான்.